தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என பல்வேறு நாடுகளில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் நேபாள நாட்டின் உச்ச நீதிமன்றம் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதையொட்டி நேபாளம் நாட்டின் முதல் தன்பாலின திருமணத்தை லாம்ஜங்கில் நேற்று பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து டோர்டி கிராமப் பேரூராட்சித் தலைவர் யுவராஜ் அதிகாரி கூறுகையில், நவல்பரசி கிழக்கில் உள்ள கவாசோதி நகராட்சியைச் சேர்ந்த சுரேந்திர பாண்டே(27) என்பவருக்கும், மாயா குருங்(37) என்பவருக்கும் வார்டு 2 அலுவலகத்தில் திருமணம் பதிவு செய்யப்பட்டது என்றார்.
இதுகுறித்து தன்பாலின முன்னணி அமைப்பின் சுனில் பாபு பந்த் கூறுகையில், "23 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு இந்த வரலாற்றுச் சாதனையை நாங்கள் பெற்றோம்" என்றார்.