காஸாவில் அமைதி வேண்டும்... உண்ணாவிரதத்தில் பங்கேற்ற பிரபல நடிகை!


காஸாவின் பட்டினிக்கு அமெரிக்க அதிபர்தான் காரணம் என குற்றம்சாட்டி அமெரிக்க வெள்ளை மளிகை முன்பாக நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் நடிகை சிந்தியா நிக்சன் கலந்து கொண்டுள்ளார்.

சிந்தியா நிக்சன்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் தற்போது மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க அதிபர் வரவேற்றுள்ளார். அத்துடன் போர் நிறுத்த ஒப்பந்த பணியில் தான் தொடர்ந்து சில நாட்கள் ஈடுபட்டதாகவும், அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாடும் கூடுதல் நிதியுதவியை பாலஸ்தீனியர்களுக்கு வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் போர்நிறுத்தம் கோரி அமெரிக்க உரிமைவாதிகள் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். வெள்ளை மாளிகைக்கு வெளியே தொடங்கிய இந்த போராட்டத்தில் பிரபல நடிகையும், முற்போக்கு வழக்கறிஞருமான சிந்தியா நிக்சனும் இணைந்துள்ளார்.

அவர் தனது கையில் ஏந்திய பதாகையில், 'பைடன், உங்களால் காஸா பசியால் வாடுகிறது. நிரந்தர போர் நிறுத்தம் இப்போதே வேண்டும்' என எழுதப்பட்டுள்ளது. மேலும் சிந்தியா இதுகுறித்து கூறுகையில், 'தற்போதைய போர்நிறுத்தம் தொடர வேண்டும் என்று நாங்கள் அவரிடம் கேட்டுக் கொள்கிறோம். மேலும் நிரந்தர சமாதானத்தை கொண்டுவரும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அதை கட்டியெழுப்ப வேண்டும்.

மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்படுவதற்கும், பட்டினி கிடைப்பதற்கும் அமெரிக்க வரி டாலர்கள் உதவுவதை நாம் அனுமதிக்க முடியாது. எப்போதும் நடக்கக்கூடாது என்பது எவருக்கும் எப்போதும் நடக்கக்கூடாது என்பது தான்' என தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...
குஷ்பு புகைப்படம் மீது சாணி வீசி, துடைப்பத்தால் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார்!

பகீர்... 31 துண்டுகளாக வெட்டிப் புதைக்கப்பட்ட பட்டியலின பெண்: கணவன், மனைவி கைது!

x