இஸ்ரேலுக்கு சென்றார் எலான் மஸ்க் - பிரதமர் நெதன்யாகுவை சந்தித்துப் பேசினார்!


இஸ்ரேல் சென்றுள்ள பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார்.

இஸ்ரேல் -ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் (எக்ஸ்) நிறுவனங்களின் தலைவராக செயல்பட்டு வருபவரும் பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க், யூத சமூகத்தினருக்கு எதிராக கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார்.

போர் தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பரவும் தவறான தகவல்கள், வீடியோக்களை எலான் மஸ்க் அகற்றவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இஸ்ரேல் சென்றுள்ள எலான் மஸ்க் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக்கை சந்தித்து பேசினார்.

எலான் மஸ்க்

அதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பால் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவிருக்கிறார் எலான் மஸ்க்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய போர், 50 நாள்களைக் கடந்து, தீவிரமாக நடைபெற்றுவருகிறது. உலகெங்கும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் பல்வேறு நாடுகளில் மக்கள் பேரணிகளை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் ஒரு பயனர், "வெள்ளையர்களுக்கு எதிராக யூதர்கள் வெறுப்பைத் தூண்டிவிடுகிறார்கள்" எனக் கருத்து பதிவிட்டிருந்தார்.

இந்தக் கருத்தை எக்ஸ் வலைதளத்தின் தற்போதைய நிறுவனரும், உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், ஆமோதிக்கும் வகையில், ``நீங்கள் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறீர்கள்" என பதிலளித்துப் பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, ``யூதர்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரம்" என பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், தற்போதைய பிரதமர் ரிஷி சுனக் ஆகியோரும், அமெரிக்கா தரப்பிலிருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

x