கண்ணில் படும் இலக்குகளை பஸ்பமாக்கும் ‘ட்ராகன் ஃபயர்’ லேசர் ஆயுதம்... பிரிட்டன் பெருமிதம்


லேசர் மூலம் தாக்குதல் - லேசர் ஆயுதம்

கிமீ அப்பால் தனது கண்ணில் படும் இலக்குகளை எல்லாம் சாம்பலாக்கும் லேசர் ஆயுதத்தை பிரிட்டன் தனது ராணுவத்தின் அங்கமாக்கி உள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போர்க்களம், ஆயுதங்கள் உற்பத்தி மற்றும் அவற்றின் பயன்பாட்டுக்கான சோதனைக்களமாகி வருகிறது. ரஷ்யாவும் அதற்கு எதிரான மேற்கு நாடுகளுமாக தங்களது புதிய ஆயுத ரகங்களை, எதிரெதிரே நின்று உக்ரைனில் சோதித்து வருகின்றன. அந்த வகையில் ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல்களை வீழ்த்துவது உக்ரைனுக்கு பெரும் சவாலாகி வருகிறது. உக்ரைனை அனைத்திலும் அரவணைத்து வரும் மேற்கு நாடுகள், ட்ரோன்களுக்கு எதிரான ஆயுதங்களை தயாரிப்பதில் முன்னேறி வருகின்றன.

பிரிட்டனின் லேசர் ஆயுதம்

அந்த வகையில் பிரிட்டன் தேசம் தனது முதல் லேசர் ஆயுதத்தை ராணுவம் மற்றும் கடற்படையில் சேர்ப்பது குறித்து பகிரங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தொழில்நுட்ப ஆதரவுடன் பிரிட்டன் தயாரித்திருக்கும் இந்த லேசர் ஆயுதங்கள் குறைந்த செலவில், அதிக சேதத்தை உருவாக்குபவை என வர்ணிக்கப்படுகின்றன. லேசர் நுட்பமும் அவற்றின் பயன்பாடும் தலைமுறைக்கு முந்தையவை என்றபோதும், பிரிட்டன் படைத்துள்ள ட்ராகன் ஃபயர் ஆயுதம் பெரும் பாய்ச்சலாக பார்க்கப்படுகிறது.

எதிரிகளின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை குறிவைத்து தாக்குதவதில் லேசர் ஆயுதங்களின் செயல்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. ’ட்ராகன் ஃபயர்’ என்ற பெயரிலான இந்த லேசர் ஆயுதத்தை 10 நிமிடங்கள் சுடுவதற்கு பயன்படுத்துவது என்பது, வாட்டர் ஹீட்டரை ஒரு மணி நேரம் பயன்படுத்துவதற்கு இணையான செலவை மட்டுமே உருவாக்கும். இது போர் ஆயுதங்கள் தயாரிப்பில் பெருமளவு செலவு விரயத்தை குறைக்கும். மேலும் குறிப்பிட்ட இலக்கை மட்டுமே அழிப்பதன் மூலம், இணை சேதத்தை தடுப்பதிலும் லேசர் ஆயுதங்கள் சிறப்பு பெற்றவை.

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் லேசர் ஆயுதத்தின் அதிகபட்ச வரம்பு குறித்து கமுக்கம் காக்கிறது. ஆனால் ராணுவத்தின் தரப்பில் "லேசர் ஆயுதம் தனது கண்ணில் படும் எந்தவொரு இலக்கையும் எளிதில் அழிக்கும் சக்தி வாய்ந்தது" என்கிறது. ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், சுமார் ஒரு கிமீ தொலைவிலிருந்த ஒற்றை நாணையத்தை மட்டுமே குறிவைத்து தாக்குமளவுக்கு லேசர் வீரியத்தை உறுதி செய்திருக்கிறார்கள். லேசர் ஆயுதத்தின் பயன்பாடு தொடர்பான வீடியோவை பொதுவெளியில் பிரிட்டன் பகிர்ந்ததில், அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

சிஏஏ அமல்; பாஜகவையும் அதிமுகவையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!

x