குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 3 நாள் அரசு முறை பயணமாக இன்று மொரீஷியஸ் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.
இந்தியா-மொரீஷியஸ் உறவுகளுக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில், அந்நாட்டு தேசிய தின கொண்டாட்டங்களில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தலைமை விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
இதற்காக அவர் இன்று மொரீஷியஸ் புறப்பட்டுச் சென்றார். வரும் 13-ம் தேதி வரை அந்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் முர்மு. நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய கடற்படையின் 'ஐஎன்எஸ் திர்', 'சிஜிஎஸ் சாரதி' ஆகிய இரண்டு கப்பல்களும், இந்திய கடற்படை குழுவும் பங்கேற்க உள்ளன.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் பயணம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்தியா-மொரீஷியஸ் உறவுகளில் ஒரு புதிய மைல்கல். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மொரீஷியஸுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மொரீஷியஸ் தேசிய தின கொண்டாட்டங்களில் குடியரசுத் தலைவர் நாளை தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். கடந்த 2000-ம் ஆண்டு முதல் மொரீஷியஸ் தேசிய தினத்தில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ளும் 6-வது இந்திய குடியரசுத் தலைவர் என்ற பெருமையை அவர் பெற உள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் அரசுமுறைப் பயணம் இந்தியாவுக்கும் மொரிஷியஸுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் நீடித்த உறவுகளை அடிக்கோடிட்டு காட்டுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
மொரீஷியஸ் பயணத்தின் போது அந்நாட்டு அதிபர் பிருத்விராஜ் சிங் ரூபன், பிரதமர் ஜுக்னாத் ஆகியோரையும் குடியரசுத் தலைவர் திரவுபதி சந்தித்துப் பேச உள்ளார். மேலும், மொரீஷியஸ் தேசிய சட்டப் பேரவை சபாநாயகர், அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற முக்கிய தலைவர்களையும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சந்திக்க உள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
தத்துவமேதை சாணக்யரின் வம்சமா தோனி ?! வைரலாகும் ஆய்வு முடிவுகள்!
#Oscars2024 | 7 விருதுகளை வென்று மாஸ் காட்டிய ‘ஓப்பன்ஹெய்மர்’!
டிகிரி படித்திருந்தால் போதும்... இந்திய அரசு நிறுவனத்தில் வேலை!
'அனைவரும் பைத்தியமாகி விட்டனர்'... அமைச்சர் உதயநிதி மனைவியின் ஆவேசப் பதிவு!
திண்டுக்கல்லில் ஜோதிமணி, மயிலாடுதுறையில் திருநாவுக்கரசர்?... தொகுதி மாறும் எம்.பி-க்கள்!