காசாவில் வெளிச்சக் கீற்று... ஹமாஸ் வசமிருந்து 13 இஸ்ரேலியர்; 12 தாய்லாந்து நாட்டவர் விடுவிப்பு


இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிப்பு

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான 4 நாள் தற்காலிக போர் நிறுத்தத்தின் தொடக்கமாக, பரஸ்பரம் சிறைக்கைதிகள் - பிணைக்கைதிகள் விடுவிப்பு வைபவங்கள் அரங்கேறி உள்ளன.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் அதன் 7வது வாரத்தை எட்ட உள்ள சூழலில் இருதரப்பும் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இறங்கி வந்தன. இஸ்ரேல் தரப்பில் 1400, காசாவில் 13000 என பரஸ்பரம் உயிர்ப்பலிகளை விழுங்கிய சமகாலத்தின் மோசமான போர், சர்வதேச அழுத்தத்தின் காரணமாக சிறிய இடைவெளி கண்டிருக்கிறது.

அதிலும், மற்றுமோர் வெளிச்சக் கீற்றாய், இருதரப்பும் தங்கள் வசமிருக்கும் எதிர்தரப்பினரை விடுவிக்க முன்வந்துள்ளனர். இஸ்ரேல் சிறைகளில் இருக்கும் பாலஸ்தீனியர்களில் 39 பேரை விடுவிக்க இஸ்ரேல் முன்வர, கைமாறாக ஹமாஸ் தனது வசமிருக்கும் இஸ்ரேலிய பிணைக்கைதிகள் 13 பேரை விடுவிக்க முன்வந்தது.

இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிப்புக்காக ஆம்புலன்ஸ் உடன் காத்திருக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர்

இதன்படி முதலில் இஸ்ரேலிய சிறையிலிருந்து 24 பெண்கள், 15 ஆண்கள் என 39 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பதிலுக்கு தனது வசமிருக்கும் பிணைக்கைதிகளில் 13 இஸ்ரேலியர்களை எகிப்து வாயிலாக இஸ்ரேலுக்கு அனுப்ப ஹமாஸ் முன்வந்தது. இவர்களுடன் 12 தாய்லாந்து நாட்டவரும் விடுவிக்கப்பட்டார்கள். இதனை தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் ட்விட்டர் பதிவு வாயிலாக உறுதி செய்திருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

சீனாவை பதறவைக்கும் நிமோனியா காய்ச்சல்; இந்தியாவில் பரவுமா? - மத்திய அரசின் புதிய அறிவிப்பு!

பிக் பாஸ் நடிகைக்கும் பாலியல் தொல்லை கொடுத்த சீனு ராமசாமி - பிஸ்மி மீண்டும் அதிரடி புகார்!

x