பாகிஸ்தான் அதிபரானார் ஆசிப் அலி சர்தாரி - இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர் தோல்வி!


ஆசிப் அலி சர்தாரி

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவரான ஆசிப் அலி சர்தாரி, அந்நாட்டின் 14ஆவது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டின் அதிபராக அவர் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் வரலாற்றில் ஒருவர் 2ஆவது முறையாக ஜனாதிபதியாவது இதுவே முதல்முறை ஆகும்.

பாகிஸ்தானின் 14-வது அதிபராக ஆரிப் அலி சர்தாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நவாஸ் ஷெரீப் கட்சியின் ஆதரவுடன் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட சர்தாரி வெற்றிபெற்றுள்ளார். அதே நேரத்தில் இம்ரான் கான் ஆதரவில் நின்ற மக்மூத்கான் அசாக்சாய் தோல்வி அடைந்துள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த மாதம் நடந்த பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இம்ரான்கான் கட்சியின் சின்னம் முடக்கப்பட்டதால், அவரின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆதரவுபெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 93 இடங்களிலும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 75 இடங்களிலும் வெற்றி பெற்றது. அதேபோல பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கட்சிகள் இணைந்து கூட்டணி அரசை அமைத்து, பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.

ஆசிப் அலி சர்தாரி நவாஸ் ஷெரிப்

இதனைத் தொடர்ந்து புதிய அதிபரை தேர்வு நடைபெற்ற தேர்தலில் நவாஸ் ஷெரீப் மற்றும் பிலாவல் பூட்டோ கட்சி கூட்டணி சார்பில் முன்னாள் அதிபரான ஆசிப் அலி சர்தாரி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு போட்டியாக எதிர்க்கட்சிகள் சார்பில் இம்ரான் கான் ஆதரவுடன் மக்மூத்கான் அசாக்சாய் களமிறக்கப்பட்டார்.

இந்த தேர்தலில் ஆசிப் அலி சர்தாரிக்கு ஆதரவாக 255 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் விழுந்தன. இதன் மூலம் பாகிஸ்தானின் 14-வது அதிபராக ஆசிப் அலி சர்தாரி பதவியேற்க இருக்கிறார். இதன் மூலம் பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக 2-வது முறையாக ஆசிப் அலி சர்தாரி அதிபராக பதவியேற்க உள்ளார்.

ஆசிப் அலி சர்தாரி

ஆசிப் அலி சர்தாரி, மறைந்த முன்னாள் பிரதமா் பெனாசிர் புட்டோவின் கணவர் மட்டுமின்றி, முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ சர்தாரியின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கெனவே பாகிஸ்தானின் அதிபராக 2008 முதல் 2013 ஆண்டு வரை பதவி வகித்துள்ளார்.

x