பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது முதல் சி.என்.ஜி. இருசக்கர வாகனத்தை அடுத்த காலாண்டிற்குள் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பஜாஜ் நிறுவனம் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில் உலகின் நான்காவது மிகப்பெரிய உற்பத்தியாளராகவும், இந்தியாவின் இரண்டவாது மிகப்பெரிய இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளராகவும் உள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக பல்சர் பைக் இந்தியாவின் நம்பர்.1 ஸ்போர்ட்ஸ் பைக் மற்றும் அதன் ஸ்போர்ட்டினஸ், தடையற்ற பவர் டெலிவரி மற்றும் மேம்பட்ட டிடிஎஸ்-ஐ தொழில்நுட்பத்தை கொண்டதாக உள்ளது. இதேபோல் அவெஞ்சர் பைக், இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் க்ரூஸர் இருசக்கர வாகனமாகவும் உள்ளது.
இதைத்தொடர்ந்து தற்போது இருசக்கர வாகனங்களில் புது முயற்சியாக முதன் முதலில் சி.என்.ஜி வாகனங்களை அறிமுகம் செய்ய பஜாஜ் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, பஜாஜ் நிறுவனத்தின் சி.என்.ஜி. இருசக்கர வாகனம் வரும் ஜூன் மாதமே அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக பஜாஜ் நிறுவனம் தெரிவித்திருந்தது. தற்போது முன்னதாகவே வெளிவரவுள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது வரை இந்த வாகனம் குறித்தான எந்த தகவலும் வெளியாகாவிட்டாலும், இந்த மாடல் பல்வேறு பிரிவுகளில் நிலைநிறுத்தக்கூடிய வகையில், 100சிசி-யில் இருந்து 160சிசி வரையிலான திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. நகர்ப்புறங்களில் பஜாஜ் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களை பெறவில்லை என்பதால், இந்த புதிய சி.என்.ஜி. வாகனம் மூலம் பஜாஜ் நிறுவனத்திற்கு நகர்ப்புற விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.