அமெரிக்க ஊடக ஜாம்பவானான ரூபர்ட் முர்டோக், 92வது வயதில் தனது 67 வயது காதலியை 5ம் திருமணம் செய்ய உள்ளார்.
அமெரிக்காவின் 'ஃபாக்ஸ்' மற்றும் 'நியூஸ் கார்ப்' ஆகியவற்றின் முன்னாள் தலைவர் ரூபர்ட் முர்டோக் (92). இவருக்கும் இவரது, காதலி எலினா ஜுகோவாவுக்கும் (67) நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ரூபர்ட் முர்டோக்கிற்கு இது ஐந்தாவது திருமணமாகும். கலிபோர்னியாவின் மொராகாவில் உள்ள அவரது திராட்சைத் தோட்டத்தில் இவர்களது திருமணம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலெனா ஜுகோவா, ரஷ்யாவின் மாஸ்கோவைச் சேர்ந்தவர். 67 வயதான இவர் ஒரு ஓய்வு பெற்ற மூலக்கூறு உயிரியலாளர் ஆவார். எலெனா ஜுகோவாவுடன், ரூபர்ட் முர்டோக் கடந்த ஆண்டில் டேட்டிங் செய்யத் தொடங்கினார். இந்த ஜோடி, ரூபர்ட் முர்டோக்கின் 3வது மனைவி வெண்டி டெங் மூலம் முதன் முதலில் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூபர்ட் முர்டோக், தனது 4வது மனைவியான நடிகையும், மாடலுமான ஜெர்ரி ஹால்-ஐ கடந்த 2022ல் விவாகரத்து செய்தார். அதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஜோடியின் திருமணம் நடைபெற்றது.
ஆஸ்திரேலிய விமான பணிப்பெண் பாட்ரிசியா புக்கர், ஸ்காட்லாந்தில் பிறந்த பத்திரிகையாளர் அன்னா மான் ஆகியோர் ஊடக பெரும்புள்ளியான ரூபர்ட் முர்டோக்கின் மற்ற இரு முன்னாள் வாழ்க்கைத் துணைவியர் ஆவர். ரூபர்ட் முர்டோக் 1950-களில் ஆஸ்திரேலியாவில் தனது தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் 1969-ம் ஆண்டில் இங்கிலாந்தில் 'நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட்' , 'தி சன்' ஆகிய செய்தித்தாள்களை வாங்கினார். மேலும், 'நியூயார்க் போஸ்ட்' , 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' உள்ளிட்ட பல்வேறு அமெரிக்க செய்தித்தாள் நிறுவனங்களையும் ரூபர்ட் முர்டோக் வாங்கினார்.
1996-ம் ஆண்டில், அவர் 'ஃபாக்ஸ் நியூஸ்' ஐ தொடங்கினார். 2013-ம் ஆண்டில் 'நியூஸ் கார்ப்' நிறுவனத்தை நிறுவினார். கடந்த ஆண்டு, ரூபர்ட் முர்டோக் தனது ஊடக சாம்ராஜ்யத்தின் முன்னணி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் தனது மகன் லாச்லானிடம் பொறுப்புகளை கைமாற்றினார்.
இதையும் வாசிக்கலாமே...
ரஹ்மானுக்கு இசையும் பணமும் தான் குறிக்கோள்!
மகா சிவராத்திரி : நான்கு கால பூஜைகளும், தரிசிப்பதன் பலன்களும்! வில்வாஷ்டகம் சொல்ல மறக்காதீங்க!
தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே பரிசுப்பொருட்களை விநியோகிக்கும் திமுக?! களேபரமான கரூர்!
அட்டைப் படத்திற்கு ஹாட் போஸ் கொடுத்த சமந்தா...ஃபயர் விடும் ரசிகர்கள்!
போர்க்களமான புதுச்சேரி... ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முயற்சி... தள்ளு முள்ளுவால் பரபரப்பு!