எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மேலும் 18 மீனவர்கள் இன்று அதிகாலை சென்னை வந்தனர்.
கடந்த மாதம் 7-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேர் தங்களது இரண்டு படகுகளில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கச்சத்திவு, நெடுந்தீவு பகுதிகளில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் 2 படகுகளில் சென்ற 18 மீனவர்களை கைது செய்தனர்.
அத்துடன் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக மத்திய மாநில அரசு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் காரணமாக இலங்கை அரசு 18 மீனவர்களை விடுதலை செய்தது. அப்படி விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் 18 பேருக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்த பின் இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர்.
மீனவர்களை தமிழக பாஜக மீனவர்ணி நிர்வாகிகள் வரவேற்க வந்தனர். அப்போது மீனவர்களுக்கு சால்வை அளித்த போது, அதனை நிராகரித்த மீனவர்கள், “நாங்கள் ஒன்றும் சாதனை செய்துவிட்டு வரவில்லை. சிறையில் இருந்து வருகிறோம்” எனக் கூறி சால்வையை வாங்க மறுத்து விட்டனர். அதன்பின்னர் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் 18 மீனவர்களை அரசு செல்வில் சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு வாகனங்களில் அழைத்து சென்றனர்.
கடந்த முறையும் பாஜக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்க முயற்சி செய்தபோது ”முதலில் படகுகளை மீட்டுத் தருவதற்கான வழிவகையை செய்யுங்கள்” எனக் கூறிய நிலையில் தற்போது வந்த மேலும் 18 மீனவர்களும் பாஜக நிர்வாகிகளின் வரவேற்பை ஏற்காமல் சென்றதால் பாஜகவினர் வேதனையுடன் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் வாசிக்கலாமே...
எரிவாயு சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைப்பு... தேசிய மகளிர் தினத்தில் பிரதமர் மோடி அசத்தல் அறிவிப்பு
பகீர்... துண்டு துண்டாக வெட்டி வாலிபர் படுகொலை: சென்னையில் ரவுடிகள் 2 பேர் கைது!
சிக்கலில் திமுக... உதயநிதியை வளைக்கும் வியூகத்தில் மத்திய சக்திகள்?
ஷாக்... இலங்கையைச் சேர்ந்த 4 குழந்தைகள், தாய் உள்பட 6 பேர் குத்திக்கொலை: கனடாவில் பயங்கரம்!
ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணலை துவங்கும் திமுக, அதிமுக... முதல் பட்டியலை வெளியிடப்போவது யார்?