லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தலைவர் உயிரிழப்பு... வெளியான பரபரப்பு தகவல்!


எல்-இ-டி தீவிரவாத அமைப்பின் உளவுத்துறை தலைவர் அசாம் சீமா

பாகிஸ்தானின் பைசாபாத்தில் மாரடைப்பு காரணமாக லஷ்கர்-இ-தொய்பாவின் உளவுத்துறை தலைவரான அசாம் சீமா காலமானார்.

கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி மும்பையில் நடந்த தொடர் தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவராக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உளவுத்துறை தலைவரான அசாம் சீமா கருதப்படுகிறார். இதே போல் 2006 ஜூலையில் நடந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்திலும் இவருக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிடுவதில் அசாம் சீமாவின் பங்கு பெருமளவு இருந்ததாக கூறப்படுகிறது.

மும்பை தீவிரவாத தாக்குதல் (கோப்பு படம்)

பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதிலும், இந்தியா முழுவதும் தாக்குதல்களை ஒருங்கிணைப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்கை இவர் கொண்டிருந்தார். அல் கொய்தா அமைப்புடனான உறவுகளுக்காக அமெரிக்க கருவூல துறையால் முக்கிய தளபதியாக சீமா நியமிக்கப்பட்டிருந்தார். 2008-ம் ஆண்டில் பாகிஸ்தானில் பகவல்பூருக்கு எல்-இ-டி கமாண்டராக பணிபுரிந்தார். அப்போது லஸ்கரின் மூத்த செயல்பாட்டாளர் ஜாக்கி உர் ரஹ்மான் லெக்வியின் செயல்பாட்டு ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார்.

எல்-இ-டி தீவிரவாத அமைப்பின் உளவுத்துறை தலைவர் அசாம் சீமா

இந்நிலையில் கடந்த சில நாட்களாக லஷ்கர்-இ-தொய்பாவின் உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அசாம் சீமாவும் மரணம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ஏஜென்சிகள் தான் இந்த லஷ்கர்-இ-தொய்பா செயற்பாட்டாளர்களைக் கொலை செய்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருந்தது. இந்த நிலையில் அவர் மரணம் அடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் இரு நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இப்படியெல்லாம் வாக்கு சேகரிக்கக்கூடாது... அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

x