மூடப்பட்ட மாஸ்கோ விமான நிலையம்... ட்ரோன்கள் மூலம் உக்ரைன் உக்கிர தாக்குதல்


மாஸ்கோ

உக்ரைன் ராணுவம் ட்ரோன்கள் மூலம் நடத்திய தாக்குதலில் 2 கட்டிடங்கள் சேதமடைந்ததால் மாஸ்கோவில் விமான நிலையம் இன்று மூடப்பட்டது.

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் தீவிரமாக நடந்து வருகிறது. உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. இன்றுடன் இந்த போர் 522 வது நாளாக நீடித்து வருகிறது.

உக்ரைனில் உள்ள வணிக மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வந்தது. அந்த வகையில், காமதேனு தமிழ்ஒடேசா நகரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பழமையான தேவாலயம் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலில் 27-ம் தேதி பலத்த சேதமடைந்தது. இதில், தேவாலயத்தில் இருந்த இருவர் படுகாயமடைந்தனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் ராணுவவீரர்கள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். உக்ரைன் எல்லையில் இருந்து 500 கி.மீ தொலைவில் உள்ள ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ மீது இன்று அதிகாலை உக்ரைன் வீரர்கள் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு கட்டிடங்கள் சேதமடைந்தன. இதற்கு ரஷ்யா எதிர் தாக்குதலை நடத்தியது. இதில் ஒரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. 2 ட்ரோன்களும் மின்னனு ஆயுதங்கள் மூலம் தடுக்கப்பட்டன.

இதுதொடர்பாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், கெய்வ் ஆட்சியின் பயங்கவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் யாரும் காயமடையவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலையடுத்து மாஸ்கோ விமான நிலையம் சிறிது நேரம் மூடப்பட்டது. விமானங்களின் வருகை மற்றும் புறப்பாட்டிற்காக விமான நிலையம் மூடப்பட்டதாக டிஏஎஸ்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

x