நேற்று இலங்கைக்கு அருகே 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், பாகிஸ்தானில் இன்று காலை 5.35 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது: பாகிஸ்தானில் புதன்கிழமை காலை 5.35 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் காலை 5.35 மணியளவில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நடுநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது சேதங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
மேலும், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.31 மணியளவில் இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 1,326 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய பெருங்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 எனப் பதிவாகியுள்ளது.
இதனால் தலைநகர் கொழும்புவில் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நடுநடுக்கத்தால் உயிர்சேதமோ அல்லது சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இதையும் வாசிக்கலாமே...
உஷார்; 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
மீண்டும் விலை உயரும் அபாயம்: தொடர்மழையால் செடியிலேயே அழுகும் தக்காளி!
மீண்டும் மீண்டுமா... அடுத்த சிக்கலில் மாட்டித் தவிக்கும் சிவகார்த்திகேயன்!
பிரதமர் மோடி குறித்து அவதூறு: ஆம் ஆத்மிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
கிராமத்தில் 20 முறைக்கும் மேல் மின்தடை: அதிகாரிகளைப் பழிவாங்க கவுன்சிலர் செய்த அதிர்ச்சி காரியம்!