இலங்கையில் 6.2 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - அச்சத்தில் உறைந்த மக்கள்!


நில நடுக்கம் - ரிக்டர் ஸ்கேல் பதிவு

இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புலிருந்து தென்கிழக்கே 1326 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கு அருகே மதியம் 12.31 மணியளவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கொழும்புவில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நில அதிர்வுக்கான தேசிய மையம் தனது எக்ஸ் பக்கத்தில், கொழும்புவுக்கு தென் கிழக்கே 1326 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், மதியம் 12.31 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம்

இலங்கை தலைநகர் கொழும்புவில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் மற்றும் மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...


கவுண்டர் பையனைத்தான் கல்யாணம் கட்டுவோம்; உறுதிமொழி எடுத்த பெண்கள்: திமுக கூட்டணி கட்சி நிர்வாகியால் சர்ச்சை!

x