எலான் மஸ்க்கிற்கு நோபல் பரிசு தர வேண்டும்... நார்வே எம்.பி கோரிக்கை!


எலான் மஸ்க்

அமைதிக்கான நோபல் பரிசுக்கு எலான் மஸ்க் பெயரை பரிந்துரைக்கலாம் என்று நார்வே நாடாளுமன்ற உறுப்பினர் மரியஸ் நில்சன் கூறியுள்ளார்.

எலான் மஸ்க், மரியஸ் நில்சன்

டெஸ்லா, ட்விட்டர், ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங்க் போன்ற நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார் 53 வயதான மஸ்க். சமூக வலைதளமான ட்விட்டரை 2022-ம் வாங்கி எக்ஸ் என்று பெயரை மாற்றினார். அவரது நிறுவனம் ரஷ்யா- உக்ரைன் போரில் ராணுவத்திற்காக செயற்கை கோள் தொடர்பினை எலான் மஸ்க் நிறுவனம் ஏற்படுத்தித் தந்தது.

இதற்காகவே எலான் மஸ்க் பெயரை 2024-ம் ஆண்டிற்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கலாம் என்று நார்வே நாடாளுமன்ற உறுப்பினர் மரியஸ் நில்சன் கூறியுள்ளார்.

நார்வேயில் முற்போக்குக் கட்சியைச் சேர்ந்த மரியஸ் நில்சன், வெளிப்படையான பேச்சு மற்றும் பல்வேறு தரப்பு வாதங்களை அனுமதிக்கும் ட்விட்டரை வாங்கி அதன் தணிக்கைக்கு முற்றுப் புள்ளி வைத்ததாகவும், சுதந்திர கருத்துரிமையை ஊக்குவிக்கும் செயலில் ஈடுபடுவதால் எலான் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தகுதியானவர் என்றும் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


பணிகள் நிறைவு... கருணாநிதி நினைவிடத்தை 26-ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார்!

ரூ.3000 கோடி ’மியாவ் மியாவ்’ போதைப்பொருள் மீட்பு... டெல்லி - புனே போதை வலைப்பின்னலில் கிறுகிறுத்த போலீஸார்

x