செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் எதிரொலியாக இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான டீசல் எண்ணெய் வர்த்தகம் கடும் சரிவை சந்தித்துள்ளது.
காஸாவுடனான போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் செங்கடல் வழியாகச் செல்லும் இஸ்ரேல் தொடா்புடைய கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். வணிக கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களால் சர்வதேச வர்த்தகம் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படும் டீசல் உள்ளிட்ட எரிபொருள் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
செங்கடலில் நிலவும் பாதுகாப்பின்மை, ஆசியாவில் நிலவும் திட்டமிடப்படாத சுத்திகரிப்பு ஆலை பராமரிப்பு பணிகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்துக்கு அதிகரித்து சரக்குபோக்குவரத்து செலவு போன்ற காரணங்களால் கிழக்கு நாடுகளை விட, மேற்கு நாடுகளுக்கு சரக்குகளை அனுப்புவதற்கு சிறந்த வர்த்தக பொருளாதார சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிபொருள் வருகை சராசரியாக ஒரு நாளுக்கு 18 ஆயிரம் பீப்பாய்களாக கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த ஜனவரி மாத சராசரியுடன் ஒப்பிடும்போது இது 90 சதவீதத்துக்கும் அதிகமான சரிவு என வணிக தரவுகள் தெரிவிக்கின்றன.
கிழக்கு சிங்கப்பூர் பிராந்தியத்துக்கு ஏற்றுமதி செய்வதற்கான பொருளாதாரம் மேற்கத்திய நாடுகளை விட மிகவும் சிறப்பாக உள்ளது என ஸ்பார்டா வணிக சரக்கு ஆய்வாளர் ஜேம்ஸ் நோயல்-பெஸ்விக் கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் அல்லது அட்லாண்டிக் பேசின் (அமெரிக்கா) செல்லும் கப்பல்கள் ஹூதி அச்சுறுத்தலால் தென்னாப்பிரிக்காவின் 'கேப் ஆஃப் குட் ஹோப்' ஐ சுற்றிச் செல்லும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் பயண தூரம் அதிகரித்து கூடுதல் செலவுகள் ஏற்படுகின்றன. இதை தவிர்கக, சூயஸ் கால்வாயைப் பயன்படுத்தலாம் என்றால் அதில் கூடுதல் அபாயங்கள் உள்ளன. இந்த காரணங்களால் ஐரோப்பிய நாடுகளுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அங்கு அனுப்பப்படும் எரிபொருள் வர்த்தகம் குறைந்துள்ளது.
இதன் காரணமாக 'பீஸ் விக்டோரியா' , 'ஆரஞ்சு விக்டோரியா’ போன்ற வணிக கப்பல்கள் ஐரோப்பிய பிராந்தியத்திலிருந்து கிழக்கு ஆசியாவுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.
இதையும் வாசிக்கலாமே...
நடிகர் விஜய் கட்சியினர் மீது வழக்குப் பாய்ந்தது... கொடியும் அகற்றம்!
மத்திய அரசின் யோசனையை நிராகரித்த விவசாயிகள்...'டெல்லி சலோ' மீண்டும் நாளை தொடங்குகிறது!
சென்னையில் மமக நிர்வாகி மீது தாக்குதல்...திமுக செயலாளர் மீது வழக்கு!
ஜெயலலிதாவின் 28 கிலோ தங்க, வைர நகைகள், 800 கிலோ வெள்ளிப் பொருட்கள் தமிழகம் வருகிறது!
அந்த வீடியோவை காண்பித்து நோயாளிக்கு அறுவை சிகிச்சை... ஆந்திராவில் நடந்த சுவாரஸ்யம்!