பாலஸ்தீன பயங்கரவாதக் குழுவான ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்குமான போரில் அப்பாவி பொதுமக்கள் பலியாவது தொடர்ந்து வரும் நிலையில் தென்னாப்பிரிக்கா, இஸ்ரேலுடனான தனது உறவை முடிவு செய்ய இஸ்ரேலில் இருந்த ஒட்டுமொத்தத் தூதரக அதிகாரிகளையும் திரும்ப பெற்றுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ச்சியாக அமைதியை உருவாக்கும் நிலைப்பாடு கொண்டுள்ள நாடு, தென்னாப்பிரிக்கா. தூதர்களைத் திரும்ப பெறுவது வழக்கமான நடவடிக்கைதான். இஸ்ரேலுடனான உறவைத் தொடர்வது என்பது எல்லா விதங்களிலும் சாத்தியமா என்பது குறித்து முடிவு செய்ய அவர்கள் அழைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் தென்னாப்பிரிக்காவின் வெளியுறவு அமைச்சர் நலேதி பந்தோர்.
தென்னாப்பிரிக்கா இஸ்ரேல் நாட்டில் தூதர் யாரையும் கொண்டிருக்கவில்லை. நாடு முழுவதும் பணியாற்றிய தூதரக அதிகாரிகளே தற்போது திரும்பப் பெறப்பட்டு உள்ளனர். மேலும், "குழந்தைகளையும் அப்பாவி பொதுமக்களையும் கொல்வது குறித்து நாங்கள் மிகவும் கவலையுறுகிறோம். இஸ்ரேலின் பதிலளிக்கும் இயல்பு என்பதை கூட்டு தண்டனையாகத் தான் பார்க்க முடிகிறது. முழுமையான போர் நிறுத்தத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்" என அவர் தெரிவ்த்துள்ளார்.
"தென்னாப்பிரிக்கா தனது ஒட்டுமொத்த தூதரக அதிகாரிகளையும் திரும்ப பெற்றது என்பது பயங்கரவாத குழுவான ஹமாஸுக்கும் ஈரானுக்கும் கிடைத்த வெற்றி" என இஸ்ரேலிய வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அக்.7 -ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1400-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானார்கள். அதற்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் தொடர்ந்து வரும் போர் 32-வது நாளாக நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 4,104 குழந்தைகள் உட்பட 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அரசு தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்