இவர் தான் பாகிஸ்தான் பிரதமர் வேட்பாளர்.... இம்ரான் கான் அதிரடி அறிவிப்பு!


ஒமர் அயூப்

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் பொதுச் செயலாளர் ஒமர் அயூப்பை பிரதமர் வேட்பாளராக இம்ரான் கான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தானில் கடந்த வாரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகளும் வெளியான நிலையில், எந்த கட்சியும் இன்றும் ஆட்சி அமைக்காமல் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. மேலும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைத்ததால், கூட்டணி ஆட்சி அமையும் என தெரியவருகிறது.

இந்த தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் கட்சி 75 தொகுதிகள், பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதனால், பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சியை அமைக்க இந்த இரு கட்சிகளும் முன்வந்துள்ளன. ஆனாலும், அதற்கான முடிவு இன்னும் எட்டப்படாத நிலை நீடிக்கிறது.

எனினும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைந்து பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிட்டு வருகின்றன. இந்நிலையில், பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப்பை அவரது சகோதரர் நவாஸ் ஷெரீப் பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இம்ரான் கானுடன் ஒமர் அயூப்

இந்த நிலையில், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றிருக்கும் நிலையிலும், ஆட்சியமைக்க முடியாத சூழல் உள்ளது. இதனால், கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டு மீண்டும் பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி பொதுச்செயலாளர் ஒமர் அயூப்பை பிரதமர் வேட்பாளராக நியமித்துள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 101 சட்டமன்ற இடங்களை வென்றாலும், அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்லது கட்சிகளின் கூட்டணியால் மட்டுமே ஒரு அரசாங்கத்தை அமைக்க முடியும்.

இதனால், வெற்றி சுயேச்சை வேட்பளர்கள் மற்றொரு கூட்டணியில் இணைய வேண்டும். அப்போது, தான் ஆட்சியமைக்கும் சூழல் உருவாகும். இந்த சூழலில், இம்ரான் கானின் பிடிஐ கட்சியின் ஒமர் அயூப்பை பிரதமர் வேட்பாளராக நியமித்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


குட்நியூஸ்... வார விடுமுறையை முன்னிட்டு 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வர்கள் கவனத்திற்கு... அரசு தேர்வுகள் துறை இயக்குநர் முக்கிய அறிவிப்பு!

x