காதலர் தினத்தில் கருணைக் கொலை; கரம் கோத்து உயிர்நீத்த முன்னாள் பிரதமரும் மனைவியும்!


நெதர்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் ட்ரைஸ் வான் அக்ட் மற்றும் அவரது மனைவி யூஜீன்

நெதர்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் ட்ரைஸ் வான் அக்ட் மற்றும் அவரது காதல் மனைவி யூஜீன் ஆகியோர் ஒருவருக்கொருவர் கரம் கோத்தபடி 93 வயதில் காதலர் தினமான நேற்று கருணைக் கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நெதர்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் ட்ரைஸ் வான் அக்ட் இவரது மனைவி யூஜீன். ட்ரைஸ் வான் கடந்த 1977 மற்றும் 1982ம் ஆண்டுகளில் நெதர்லாந்து கிறிஸ்டியன் டெமாக்ரடிக் அப்பீல் கட்சியின் தலைவராக இருந்தவர். 93 வயதான ட்ரைஸும் அவரது மனைவி யூஜீனும் வயோதிகம் காரணமாக நோய்வாய்ப்பட்டு இருந்தனர். அதனால் தங்களை கருணைக் கொலை செய்துவிடும்படி இருவருமே அந்நாட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.

நெதர்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் ட்ரைஸ் வான் அக்ட் மற்றும் அவரது மனைவி யூஜீன்

நெதர்லாந்து நாட்டில் தம்பதிகளாக கருணை கொலை செய்யப்படுவதற்கு அனுமதி அளிக்கும் சட்டம் 2020 முதல் அமலில் இருந்து வருகிறது. இதன்படி 2020-ல் 26 தம்பதியும், 2021-ல் 32 தம்பதியும், 2022-ல் 58 தம்பதியும் அவர்களின் கோரிக்கையை ஏற்று கருணைக் கொலை செய்யப்பட்டனர்.

நெதர்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் ட்ரைஸ் வான் அக்ட் மற்றும் அவரது மனைவி யூஜீன்

அந்த வகையில் காதல் தம்பதியரான ட்ரைஸ் - யூஜீன் காதலர் தினமான நேற்று ஒன்றாக கரம் கோத்தபடி தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டனர். சுமார் 70 ஆண்டு காலம் இணைபிரியாது வாழ்ந்த இந்த தம்பதியர் ஒன்றாக உயிரிழந்த சம்பவம் நெதர்லாந்து நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று தொடங்குகிறது சிபிஎஸ்இ தேர்வுகள்... 39 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!

x