இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரான் நாட்டு துணை அதிபர் முகமது மொக்பெர் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ம் தேதி நடத்திய தாக்குலில் சுமார் 1400 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் போர்த் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் இதுவரை சுமார் 9,400 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து உலகின் பல்வேறு நாடுகளும், காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் 6வது சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சியில் கலந்து கொண்டு பேசிய ஈரான் துணை அதிபர் முகமது மொக்பெர், ’இஸ்ரேல் அரசு எண்ணிலடங்காத போர் குற்றங்கள் மற்றும் மனித இனத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்து வருவதாக’ குற்றம் சாட்டியுள்ளார்.
’சர்வதேச அமைப்புகள் உடனடியாக ஒடுக்கப்பட்ட மக்கள் கொல்லப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காசா பகுதி மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை விலக்கி, மனிதாபிமான உதவிகள் கிடைக்க உதவிட வேண்டும்’ எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ’காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது போர்க்குற்றம் எனவும் அமெரிக்கா இதில் தலையிட்டு போரை நிறுத்த வேண்டும்’ எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...