இஸ்ரேலை காணடித்த சீன நிறுவனங்கள்... இந்தியாவை தொடர்ந்து இஸ்ரேலுக்கும் ‘மேப்’ சர்ச்சை!


உலக வரைபடத்தில் இஸ்ரேல் - காசா

சீன நிறுவனங்கள் தங்களது ஆன்லைன் வரைபடங்களில் இஸ்ரேல் என்ற ஒரு தேசத்தின் அடையாளத்தை அகற்றி இருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்கா - சீனா இடையிலான மோதல்போக்கு உலகின் சகல தளங்களிலும் எதிரொலித்து வருகிறது. இஸ்ரேல் - காசா மோதலிலும் அது வெளிப்பட்டிருக்கிறது. இஸ்ரேலின் ஆத்ம நண்பன் அமெரிக்கா என்பதால், சீனா பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டினை எட்டியுள்ளது.

இஸ்ரேல் இல்லாத வரைபடம் - சீன அதிபர் ஜி ஜின்பிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் நிலைப்பாடு பகிரங்கமாக வெளிப்பட்டதை அடுத்து, சீன நிறுவனங்கள் அதனை பலவகையிலும் எதிரொலித்து வருகின்றன. அவற்றில் ஒன்றாக தங்களது ஆன்லைன் வரைபடத்தில், இஸ்ரேல் என்ற தேசத்தையே அவை காணடித்துள்ளன.

இஸ்ரேலை விட குட்டி தேசமான லக்ஸம்பெர்க் போன்றவை சீன நிறுவனங்களின் வரைபடத்தில் இடம்பெற்றிருக்கும்போது, ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட இஸ்ரேலை இருட்டடிப்பு செய்திருக்கிறார்கள்.

சீனாவின் மிகப்பெரும் வணிக நிறுவனங்களான அலிபாபா மற்றும் பைடு ஆகியவை இஸ்ரேல் தேசத்தை புறக்கணித்துள்ளன. பைடு வரைபடத்தின் இஸ்ரேலின் எல்லைகள் வரையப்பட்டிருந்தபோதும், இஸ்ரேல் பெயரைக் காணோம். இவை தொடர்பாக அலிபாபா மற்றும் பைடு நிறுவனங்கள் வெளிப்படையாக எதனையும் அறிவிக்கவில்லை.

சீனா வரைபட சர்ச்சையில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல. தென்சீனக் கடல் பிராந்தியத்தை சீனா பெருமளவு ஆக்கிரமித்துள்ளது. இதனால் சீனாவின் பெருவணிக நிறுவனங்கள் தங்களது ஆன்லைன் வரைபடங்களில், சர்வதேச எல்லையாக வரையறுக்கப்படாத தென்சீனக் கடல் பரப்புகளை சீனாவின் ஆளுகைக்கு உட்பட்டதாக குறித்துள்ளது ஓர் உதாரணம். இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்துக்கு உரிமை கோரும் சீனா, அந்த பிராந்தியத்தை சர்ச்சைக்குரிய வகையில் தனது வரைபடத்தில் சேர்த்திருப்பதும் இதில் அடங்கும். இந்த வரிசையில் தற்போது இஸ்ரேல் தேசத்திடம் வரைபட வம்பு வளர்த்திருக்கிறது சீனா.

இதையும் வாசிக்கலாமே...

x