புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைய வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தகவலை பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "மன்னர் மூன்றாம் சார்லஸின் சமீபத்திய மருத்துவமனை பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் வெளியானதும் இங்கிலாந்து மக்கள் கவலையடைந்தனர். மேலும் மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைந்து குணமடைய வேண்டும் என பல்வேறு உலகநாடுகளின் தலைவர்களும் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதேபோல் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், மன்னர் மூன்றாம் சார்லஸ் குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் "மாட்சிமை பொருந்திய மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துவதில் இந்திய மக்களுடன் நானும் இணைகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
75 வயதான மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது தாயார் இரண்டாம் எலிசபெத் இறந்த பிறகு கடந்த ஆண்டு முடிசூடினார்.
மன்னர் மூன்றாம் சார்லஸ், நோய் பாதிப்பு காரணமாக பொது கடமைகளை ஒத்திவைக்குமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் அவர் வழக்கம்போல், தொடர்ந்து அரசு உத்தியோகபூர்வ பணிகளை மேற்கொள்வார் என அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...