3 வாரங்களை கடந்ததில் இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. போரால் இயல்பு வாழ்க்கை குலைந்திருக்கும் வடக்கு காசாவில் இஸ்ரேலின் இறுக்கம் காரணமாக பன்னாட்டு உதவிகள் சென்று சேர்வதில் இழுபறி நீடிக்கிறது.
வடக்கு காசாவில் இஸ்ரேலின் தரைப்படை புகுந்து நேரடித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஹமாஸ் போராளிகள் வசமிருக்கும் 200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை மீட்பது, இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் முதல்கட்ட நோக்கமாக நீடிக்கிறது. குடியிருப்பு பகுதிகளில் பதுங்கியிருந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் தொடுப்பதால், இஸ்ரேல் குண்டுவீச்சில் அதிக எண்ணிக்கையில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர்.
இஸ்ரேல் ராணுவம் வடக்கு காசாவை சல்லடையிட்டு தேடலையும் தாக்குதலையும் தொடர்ந்து வருகின்றன. இதனால் தாக்குப்பிடிக்க முடியாத ஹமாஸ் அமைப்பு புதிய ஒப்பந்தத்துக்கு இறங்கி வந்திருக்கிறது. இஸ்ரேல் சிறைகளில் இருக்கும் ஆயிரக்கணக்கிலான ஹமாஸ் போராளிகளை விடுவித்தால், தங்கள வசமிருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் அறிவித்தது. ஆனால் இதனை இஸ்ரேல் நிராகரித்தது.
இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவம் காசாவுக்குள் தரைமார்க்கமாக புகுந்து தாக்குதல் தொடுப்பதை அடுத்து அங்குள்ள 23 லட்சம் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலானோர் தெற்கு காசாவில் அடைக்கலமானபோதும், 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வடக்கு காசாவில் இன்னமும் உள்ளனர். இதனால் காசாவில் அதிகரிக்கும் உயிர்ப்பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக, காசா சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தீவிர தாக்குதல் மற்றும் தணிக்கை காரணமாக காசாவுக்கு சர்வதேச உதவிகள் சென்று சேர்வதிலும் தடுமாற்றம் எழுந்துள்ளது. உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றிய 33 டிரக்குகள் காசாவுக்குள் நுழைந்துள்ளன. அதிகரிக்கும் தேவையை கருத்தில் கொண்டு, தினசரி குறைந்தது 40 டிரக்குள் காசாவுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அங்குள்ள சர்வதேச உதவிகளை ஒருங்கிணைப்போர் தெரிவித்துள்ளனர். ஆனால் இஸ்ரேலின் தொடர் தாக்குதல் காரணமாக அவை பெரும் சவாலுக்கு ஆளாகி உள்ளன.
இதையும் வாசிக்கலாமே...
என் சாவுக்கு எம்எல்ஏ தான் காரணம்... கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த வாலிபர்!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.... வானிலை மையம் அறிவிப்பு
நாளை கடைசி தேதி.... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
அப்பாடா.... குறைந்தது தங்கத்தின் விலை... நகைப்பிரியர்கள் ஆறுதல்!
சோகம்... ஆந்திரா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு....18 ரயில்கள் ரத்து