இந்தியாவிற்கு ரூ.33 ஆயிரம் கோடி மதிப்பில் 31 அதிநவீன டிரோன்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ள தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா-அமெரிக்கா நாடுகளுக்கிடையேயான உறவு கடந்த சில வருடங்களாக சுமுகமாக இருந்து வருகிறது. இரு நாடுகளும் ஆயுத விற்பனை உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களை செய்து வருகின்றன. இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் தற்போது அதிநவீன ட்ரோன்களை இந்தியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்க முன் வந்துள்ளது.
உலகின் மிக அதிநவீன வசதிகளை கொண்ட 31 ஆயுத டிரோன்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வதாக அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. சமீபத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனை கொல்ல நடந்த சதி திட்டத்தில் இந்திய அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது குறித்து அமெரிக்கா விசாரணை நடத்தி வருகின்றது.
விசாரணை நிலுவையில் இருப்பதால் இந்தியாவிற்கு ஆயுத டிரோன் விற்பனை செய்வதற்கான முன்மொழிவை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தற்போது ரூ.33 ஆயிரம் கோடி மதிப்பில் 31 அதிநவீன டிரோன்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்த அதிநவீன டிரோன்கள் மூலம் இந்திய - பாகிஸ்தான் மற்றும் இந்திய - சீனா எல்லைப் பகுதிகளில் இந்தியாவின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் முடியும் என்று இந்தியா நம்புகிறது.
இதையும் வாசிக்கலாமே...