லடாக்கில் அத்துமீறிய சீன ராணுவம்... கற்களை வீசி விரட்டியடித்த கிராமவாசிகள்; வைரல் வீடியோ!


லடாக்கில் இந்திய கிராம வாசிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் சீன ராணுவத்தினர்.

இந்தியாவின் லடாக் பகுதியில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த கிராம வாசிகளை சீன ராணுவத்தினர் அச்சுறுத்தினர். அவர்களை, கிராம வாசிகள் கற்களை வீசி விரடியடித்த தீரமான சம்பவம் நடந்துள்ளது.

இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசம் சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. லடாக்கின் சுசுல் பள்ளத்தாக்கில் உள்ள நியோமா கிராமம் துங்டி பகுதியை சேர்ந்த மக்கள், எல்லைப் பகுதியில் உள்ள காக்ஜங் பகுதிக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றனர்.

அப்போது அங்கு வாகனங்களில் வந்த சீன ராணுவத்தினர், ‘‘இது சீனாவின் இடம், இங்கு வரக்கூடாது’’ என கூறி, இந்திய கிராமவாசிகளை மிரட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம வாசிகள் ‘‘நீங்கள் இங்கு வந்தது ஏன்?. இது எங்களது பாரம்பரிய இடம். காலம் காலமாக கால்நடைகளை இங்குதான் மேய்ச்சலுக்கு அழைத்து வருகிறோம்’’ என ஆவேசத்துடன் கூறினர். மேலும், சீன ராணுவத்தினர் மீது கற்களை வீசி தாக்கினர். இதையடுத்து சீன ராணுவத்தினர் அங்கிருந்து திரும்பிச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் கடந்த ஜனவரி 2ம் தேதி நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லடாக் எல்லை பகுதியில் கால்நடை மேய்க்கும் இந்திய கிராமவாசிகள்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், 6 முதல் 8 பேர் வரையிலான சீன ராணுவ வீரர்கள், ஒரு போர் வாகனத்தில் சைரன் ஒலி எழுப்பி வருவதும், அங்கு கால்நடை மேய்த்துக் கொண்டிருந்த லடாக் கிராம வாசிகளை அச்சுறுத்தும் காட்சிகளும் உள்ளன.

இந்நிலையில், ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே கூறுகையில், "லடாக்கில் சூழல் நிலையாக உள்ளது. அங்கு ராணுவத்தின் செயல்பாடு உச்சபட்ச தயார் நிலையில் உள்ளது. எல்லை பிரச்சினைகளைத் தீர்க்க ராணுவம் மற்றும் ராஜாங்க மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ராகுல் காந்தி சென்ற காரின் கண்ணாடிகள் திடீரென நொறுங்கியது... மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

x