அதிர்ச்சி... பிஸ்கட் சாப்பிட்ட பெண் நடன கலைஞர் மரணம்


பிஸ்கட் ஒவ்வாமையால் நடன கலைஞர் உயிரிழப்பு.

அமெரிக்காவில் வேர்க்கடலை மூலக்கூறுகளால் தயாரிக்கப்பட்ட பிஸ்கட்டை சாப்பிட்டு ஒவ்வாமை ஏற்பட்டதால் பெண் நடன கலைஞர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரிட்டனின் லங்காஷையரை சேர்ந்தவர் ஓர்லா பாக்செண்டேல் (25). இவர் பாலே நடன கலைஞர். தனது நடன கலை வாழ்க்கை முன்னேற்றத்துக்காக அமெரிக்கா சென்று நியூயார்க்கில் வசித்து வந்தார். இந்நிலையில் ஓர்லா பாக்செண்டேல், கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள நியுவிங்டன் பகுதியில் ஒரு கடையில் வெண்ணிலா புளோரண்டைன் குக்கீ (பிஸ்கட்)ஐ வாங்கினார்.

ஓர்லா பார்செண்டேல் நியுவிங்டன் பகுதியில் பிஸ்கெட் வாங்கிய கடை.

அந்த பிஸ்கட் கவரில் எந்த மூலப்பொருள்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது என்பது குறித்த உள்ளடக்க விவரம் குறிப்பிடப்படவில்லை என கூறப்படுகிறது. ஓர்லா பாக்செண்டேலுக்கு வேர்க்கடலை ஒவ்வாமை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அவர் வாங்கிய பிஸ்கட் வேர்க்கடலை மூலக்கூறால் தயாரிக்கப்பட்டதாக தெரிகிறது. அந்த பிஸ்கட்டை உட்கொண்டதும் ஓர்லா பாக்செண்டேலுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

தனக்கு இருக்கும் உடல்நல பாதிப்பை கருத்தில் கொண்டு, ஒவ்வாமை எதிர்ப்பு ஊசியான எபிபென்-ஐ ஓர்லா பாக்செண்டே எப்போதும் தன் வசம் அவர் தயார் நிலையில் வைத்திருப்பது வழக்கம்.

ஓர்லா பாக்செண்டேல் .

இந்நிலையில் உடல் நல குறைவு ஏற்பட்டதும் உடனடியாக அந்த ஊசி அவருக்கு செலுத்தப்பட்டது. இருப்பினும் அவர் உயிரிழந்தார்.

இதற்கிடையே சம்பந்தப்பட்ட பிஸ்கட்டை தயாரித்த குக்கி யுனைடெட் நிறுவனம் அந்த பிஸ்கட் பாக்கெட்டுகளை திரும்பப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஓர்லா பாக்செண்டே குடும்பத்தினர் கூறுகையில், “ஈடு செய்ய முடியாத இழப்பால் பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளோம்" என்றனர்.

x