ஸ்பெயின் சென்றடைந்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்... இந்திய தூதர் வரவேற்பு!


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் கே.பட்நாயக் வரவேற்றார்.

8 நாள் அரசு முறை பயணமாக ஸ்பெயின் புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அந்நாட்டின் தலைநகரான மேட்ரிட்டை சென்றடைந்தார். அங்கு அவரை இந்திய தூதரக அதிகாரிகள் மலர்க்கொத்து அளித்து வரவேற்றனர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஸ்பெயினின் மேட்ரிட் நகரை சென்றடைந்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்," தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டிற்கு கடந்த 27-ம் தேதி புறப்பட்டுச் சென்றார்.

இன்று மேட்ரிட் நகரைச் சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை, ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் கே.பட்நாயக், தூதரக அதிகாரிகள் மலர்க்கொத்து அளித்து வரவேற்றனர். அப்போது முதல்வரின் ஸ்பெயின் பயணம் வெற்றிகரமாக அமைய இந்திய தூதரக அதிகாரிகள் வாழ்த்தினர். இந்த சந்திப்பின்போது, தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உடனிருந்தார்.

தமிழ்நாடு முதல்வருக்கு ஸ்பெயினில் வரவேற்பு

ஸ்பெயின் தொழில் அமைப்புகள், ஸ்பெயின் நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று நடத்த உள்ளார். இந்த மாநாட்டில் தமிழகத்தில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் குறித்தும், தமிழ்நாட்டின் கட்டமைப்பு வசதிகள், மனிதவள ஆற்றல் போன்றவற்றின் சிறப்பம்சங்களை விளக்கி, தமிழகத்துக்கு முதலீடுகளை பெருமளவில் ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

'வானத்தில் ஆச்சரியம்'... தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட் செய்த புகைப்படம் வைரல்!

நடிகர் விஜய் கட்சியின் பெயர் 'தமுகவா'?...வெளியான பரபரப்பு தகவல்!

x