தீப்பிடித்து எரிந்த அனிமேஷன் ஸ்டுடியோ.... 36 பேரை எரித்துக் கொன்றவருக்கு மரணதண்டனை!


தீயில் எரியும் கியோட்டோ அனிமேஷன் ஸ்டுடியோ

ஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோவை தீ வைத்து எரித்ததில் 36 பேர் உயிரிழந்த வழக்கில் குற்றவாளிக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

கியோட்டோ அனிமேஷன் ஸ்டுடியோ

உலகம் முழுவதும் அனிமேஷன் படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இப்படியான அனிமேஷன் படங்களை உருவாக்குவதில் ஜப்பானில் உள்ள கியோட்டோ அனிமேஷன் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனம் தனது கதையைத் திருடியதாக ஷின்ஜி அயோபா என்பவர் குற்றம் சாட்டி வந்தார்.

இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு கியோட்டோ அனிமேஷன் ஸ்டுடியோவிற்கு ஷின்ஜி அயோபா, பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதனால் அனிமேஷன் ஸ்டுடியோவில் பற்றிய தீயில் 36 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 32 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் உலகமெங்கும் உள்ள அனிமேஷன் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கியோட்டோ மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் ஷின்ஜி அயோபா மீதான குற்றச்சாட்டு உறுதியானது. தற்போது 45 வயதாகும் ஷின்ஜி அயோபாவிற்கு மரணதண்டனை வழங்கி கியோட்டோ மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

x