அதிர்ச்சி... இந்திய பெருங்கடலில் 6.2 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்; பீதியில் மக்கள்


நிலநடுக்கம்

இந்திய பெருங்கடல் பகுதியில் 6.2 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களாக நிலநடுக்கங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி 1ம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, ஏராளமான கட்டிடங்களும் இடிந்து சேதம் அடைந்தது. இதையடுத்து உலகம் முழுவதும் ஏற்படும் நிலநடுக்கங்கள் தொடர்பாக தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு

இந்நிலையில் இந்திய பெருங்கடலில் தென்மேற்கு பகுதியில் இன்று அதிகாலை 3:39 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கம் கடற்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

x