ஒரே நேரத்தில் 5 காதலிகளுக்கு வளைகாப்பு... நெட்டிசன்களுக்கு ஷாக் கொடுத்த டிக்டாக் பிரபலம்!


ஜெடி, காதலிகளுடன்

அமெரிக்காவின் பிரபலமான டிக்டாக்கர் ஒருவர் தனது 5 மனைவிகளுக்கு ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்திய சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

வளைகாப்பு நிகழ்ச்சி

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைச் சேர்ந்தவர் ஜெடி வில்(22). ராப் பாடகராக உள்ள இவர், டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவராக உள்ளார். சாச்சா என்ற ராப் பாடல் மூலம், பிரபலமானதால், ரசிகர்கள் இவரை சாச்சா ஜெடி என அழைக்கின்றனர். இவருக்கு டிக்டாக்கில் மட்டும் 67 லட்சம் ஃபாலோயர்ஸ் உள்ளனர். மேலும், பல்வேறு இசை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும், மேலாளராகவும் உள்ளார்.

இதன் மூலம் இவருக்கு ஆஷ்லே, போனி, கேய் மேரி, ஜிலீன் விலா மற்றும் ஐயன்ல கலிஃபா கலெட்டி என்ற 5 பெண்கள் அறிமுகமாகினர். இவர்கள் 5 பேருடனும் டேட்டிங்கில் இருந்த ஜெடி வில், தற்போது அவர்களுடன் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகிறார். இந்நிலையில், இந்த 5 பேரும் ஒரே நேரத்தில் கருத்தரித்துள்ளனர்.

ஜெடியின் காதலிகள்

இதையடுத்து, தனது 5 மனைவிகளுக்கும் ஜெடி ஒரே நேரத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இதுகுறித்து, அவரது காதலிகளில் ஒருவரான ஆஷ்லே, இந்த வளைகாப்பு புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், 5 பூனைகளும் கருத்தரித்துள்ளன, குழந்தை சாச்சாக்கள் விரைவில் வரவுள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்கள் 5 பேரும் தங்கள் குழந்தைகளுக்காக ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜெடி, காதலிகளுடன்

இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இது குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்கள் அதிர்ச்சியையும், ஏக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு சிலர் பலதார திருமணத்திற்கு சமூகம் நகர்ந்துவிட்டதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து, விளக்கமளித்துள்ள ஜெடியின் இணை மேலாளர், சமூகம் மாற்றத்தைக் கண்டு வருவதாகவும், அதனால் நவீன கால உறவின் தன்மையும் மாறிவிட்டதாகவும் கூறியுள்ளார். திருமணம், காதல் உறவுகள் ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் விருப்பத்தின் அடிப்படையிலானது என்றும், சமூக கட்டமைப்பிற்குள் வைத்து எல்லாவற்றையும் அணுகக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

இரும்பே பயன்படுத்தாமல் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயில்... கட்டுமானத்தின் வியக்கவைக்கும் சிறப்பம்சங்கள்!

பாஜகவின் இன்னொரு பொய் மூட்டை தான் நிதி ஆயோக்கின் அறிக்கை: காங்கிரஸ் விமர்சனம்!

x