காசா அல்-இஸ்ரா பல்கலைக்கழக கட்டிடத்தை தரைமட்டமாக்கிய இஸ்ரேல்; அதிரவைக்கும் வீடியோ!


காசா அல்-இஸ்ரா பல்கலைக்கழக கட்டிடம் குண்டு வைத்து தகர்ப்பு.

பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள அல்-இஸ்ரா பல்கலைக்கழக பிரதான கட்டிடங்களை இஸ்ரேல் தரைமட்டமாக்கியது.

காசாவில் உள்ள பாலஸ்தீன பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டிடத்தை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (ஐடிஎஃப்) தகர்த்தாக கூறப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், கைவிடப்பட்ட பல்கலைக்கழக கட்டிடம் கம்பீரமாக காணப்படுகிறது. கட்டிடத்தின் உள்ளே வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்ததும் ஒரு நொடியில் கட்டிடம் தரைமட்டமாகி, புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. இந்த வீடியோ காட்சி தொடர்பாக போதிய தகவல் இல்லை என கூறி, கருத்து தெரிவிப்பதை அமெரிக்கா தவிர்த்துள்ளது. இருப்பினும் தெற்கு காசாவின் முக்கிய நகரமான கான் யூனிஸில் இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு, விமானத் தாக்குதல்களை தொடர்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஹமாஸ் அமைப்பினர், தலைவர்கள் இவ்வாறு மிகைப்படுத்தி தகவல்களை கூறுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

தரைமட்டமான அல்-இஸ்ரா பல்கலைக்கழக கட்டிடம்.

இதேபோல், கான் யூனிஸ் நகரில் உள்ள அல்-அமல் மருத்துவமனை அருகே இஸ்ரேல் ராணுவத்தின் பீரங்கி மற்றும் வான் வழி தாக்குதலில் 77 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 4 மாதங்களாக நீடிக்கும் இந்தப் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. இஸ்ரேல் - ஹமாஸ் போரால் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது. 24,400-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில், ஹமாஸ் கடந்த அக்டோபர் 7ம் தேதி நடத்திய தாக்குதல் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 250 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். காஸாவில் சிக்கியுள்ள 2.3 மில்லியன் மக்களில் கால் பகுதியினர் பட்டினியால் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பிரதமர் இன்று தமிழகம் வருகை... ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களில் நாளை வழிபடுகிறார்!

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை... பிரதமர் மோடி வருகையால் திடீர் கட்டுப்பாடு!

x