காஸா மீது முழுமையான போரை துவங்குவதற்கு முன்னோட்டமாக, பொதுமக்கள் பத்திரமாக வெளியேற அடுத்த 3 மணி நேர கெடுவை இஸ்ரேல் ராணுவம் விதித்துள்ளது.
இஸ்ரேல் மீது காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 8 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் தொடர்ந்து குண்டுகளை வீசி வருகிறது. இதனிடையே, எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேல் ராணுவம், காஸா பகுதிக்குள் நுழையும் என்கிற அச்சமும் இருந்து வந்தது. இந்நிலையில் எக்ஸ் தளத்தில் இஸ்ரேல் ராணுவம் இன்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இந்த நடைபாதையில் எந்த நடவடிக்கையும் தொடங்கப்படாது என கூறப்பட்டுள்ளது. மக்கள் வெளியேறுவதற்கு பாதுகாப்பான பாதை என்ற தலைப்பில் சாரா அல்தீன் தெரு என்ற சாலையின் வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில், ”காஸா நகரம் மற்றும் வடக்கு காஸாவில் வசிப்பவர்கள் கவனத்திற்கு. ஏற்கெனவே கடந்த நாட்களில் உங்கள் பாதுகாப்பிற்காக தெற்கு பகுதிக்கு இடம்பெயருமாறு உங்களை வலியுறுத்தி இருக்கிறோம். இன்று 10 மணி முதல் 1 மணி வரை இந்த வழியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். தயவுசெய்து எங்கள் அறிவுறுத்தல்களை பின்பற்றி தெற்கு நோக்கி செல்லுங்கள். ஹமாஸ் தலைவர்களும் ஏற்கனவே அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்து விட்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் மதியம் ஒரு மணிக்கு மேல் இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதிக்குள் தனது ராணுவத்தை அனுப்புவதற்கான வாய்ப்பு இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. ஏற்கனவே இந்த போரில் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் சூழலில், இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதிக்குள் நுழைந்தால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!
கருணாநிதியின் ‘மூத்த பிள்ளை’க்கு வந்த சோதனை!
ஒரு சிக்ஸர் கூட அடிக்கலை… 20 ஓவரில் 427 ரன்கள் எடுத்து மகளிர் கிரிக்கெட் அணி உலக சாதனை!
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!
ஜீன்ஸ், லெக்கின்ஸ் போட்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது... வக்கீல்களுக்கு பார் கவுன்சில் கறார் உத்தரவு!