பகீர்... வானில் பறந்த பலூன் விழுந்து நொறுங்கியதில் 4 பேர் பலி


பலூன் விழுந்து நொறுங்கி விபத்து

அமெரிக்காவில் வானில் பறந்து கொண்டிருந்த பலூன் ஒன்று கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் எலாய் என்கிற பாலைவனப் பகுதியில் வெப்பக்காற்று பலூன்கள் மூலமாக வானிற்கு பறந்து சென்று, பின்னர் அங்கிருந்து ஸ்கை டைவிங் செய்யும் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி 8 ஸ்கை டைவர்கள், 4 பயணிகள் மற்றும் ஒரு விமானி என மொத்தம் 13 பேர் பலூன் ஒன்றில் கிளம்பியுள்ளனர். திட்டமிட்டபடி ஸ்கை டைவர்கள் பலூனில் இருந்து கீழே குதித்து பாராசூட் மூலம் தரை இறங்கினர்.

4 பேர் பலி - ஒருவர் படுகாயம்

அதன்பின்னர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த பலூன், தாறுமாறாக பறக்கத் துவங்கியுள்ளது. சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உயரம் குறைந்து பாலைவனத்தில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பலூனில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பலூன் விபத்துக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை எனவும், தொழில்நுட்பக் கோளாறால் பலூன் கீழே விழுந்து நொறுங்கி விபத்திற்கு உள்ளாகி இருக்கலாம் எனவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் வாசிக்கலாமே...

திடீர் திருப்பம்... அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விவேக் ராமசாமி விலகல்: டிரம்பை ஆதரிக்க முடிவு!

x