இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள சூழலில், காசா நகரில் இருந்து இதுவரை 3.38 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, காசாவில் இஸ்ரேல் தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 2,500-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க ஆபரேஷன் அஜய் என்ற பெயரில் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
காசா நகரில் இருந்து இதுவரை 3.38 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசா பகுதியில் பொதுச் சேவைகள் நிறுத்தப்பட்டு, முழுவதுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. காசாவில் உணவு, நீர், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை அனுமதிப்பது தொடர்பாக இஸ்ரேல், அமெரிக்கா, எகிப்துடன் ஐ.நா., பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.