நேபாளத்தில் உள்ள டாங் மாவட்டத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு இந்தியர்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்திய மேற்கு நேபாளத்தின் நேபாள்கஞ்ச் பகுதியில் இருந்து காத்மண்டு நோக்கி பயணிகள் பேருந்து சென்றுகொண்டிருந்தது. பாங்கேயின் என்னும் இடத்தில் அந்த பேருந்து பாலத்தில் இருந்து விலகி ராப்தி ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் 2 இந்தியர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கோர விபத்தில் உயிரிழந்த 8 பயணிகளின் அடையாளம் இதுவரை காணப்பட்டுள்ளது. அதில் இந்தியாவின் பீகார் மாநிலம் மலாஹியைச் சேர்ந்த யோகேந்திர ராம்(67) மற்றும் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த முனே(37) ஆகியோரும் அடங்குவர். மேலும் 22 பேர் காயமுற்றனர்.
காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
அயோத்தியில் கோயில் கட்ட மோடியைத் தான் ராமர் தேர்வு செய்தார்: அத்வானி திடீர் புகழாரம்!
அமலாக்கத்துறை நெருக்கடி... ஜன.18-ம் தேதி ஆஜராக அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு 4வது முறையாக சம்மன்!
இந்தியா கூட்டணியில் இணைய வேண்டும்: மாயாவதிக்கு காங்கிரஸ் வேண்டுகோள்!
ராமர் கோயில் கும்பாபிஷேகம்... சர்ச்சைக்குள்ளான பெயர் பலகை!
திருநங்கை அப்சராவிற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு: பிரபல யூடியூபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!