அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு வரும் 22-ம் தேதி இந்து மத நம்பிக்கை உடையவர்களுக்கு 2 மணி நேர சிறப்பு விடுமுறை விடுவதாக மொரீஷியஸ் நாட்டு அரசு அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோயிலில் வரும் 22-ம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழா நடைபெறுகிறது. உலக அளவில் இந்த விழா முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
சிலை பிரதிஷ்டை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர்கள், முக்கிய சிறப்பு விருந்தினர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர். சிலை திறப்பு விழா நேரலையாகவும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, வரும் 22-ம் தேதி இந்து மத நம்பிக்கை உடையவர்களுக்கு 2 மணி நேர சிறப்பு விடுமுறை விடுவதாக மொரீஷியஸ் நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அந்நாட்டு பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்னாத் தலைமையிலான அமைச்சரவை நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “இந்தியாவில் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, இந்து மத நம்பிக்கையுள்ள அரசு அதிகாரிகளுக்கு ஜனவரி 22 பகல் 2 மணி முதல் இரண்டு மணி நேர சிறப்பு விடுப்பு வழங்க அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொரீஷியஸில் இந்து மதம் மிகப்பெரிய மதமாகும். கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கண்க்கெடுப்பு படி, அந்நாட்டு மக்கள் தொகையில் சுமார் 48.5 சதவீதம் பேர் இந்து மத வழிபாட்டை பின்பற்றுபவர்கள் ஆவர்.
ஆப்பிரிக்காவில் இந்து மதம் அதிகம் பின்பற்றப்படும் ஒரே நாடு மொரீஷியஸ் ஆகும். உலக அளவில் இந்து மதம் பரவலாக உள்ள நாடுகள் வரிசையில் இந்தியா, நேபாளத்துக்கு அடுத்ததாக மொரீஷியஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அயோத்தியில் கோயில் கட்ட மோடியைத் தான் ராமர் தேர்வு செய்தார்: அத்வானி திடீர் புகழாரம்!
அமலாக்கத்துறை நெருக்கடி... ஜன.18-ம் தேதி ஆஜராக அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு 4வது முறையாக சம்மன்!