பணியாளர் வயிற்றிலடிக்கும் செயற்கை நுண்ணறிவு... நூற்றுக்கணக்கான ஊழியர்களை பந்தாடும் கூகுள் நிறுவனம்


கூகுள்

செயற்கை நுண்ணறிவு வரவின் காரணமாக கூகுள் நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் வெளியேற்றப்பட உள்ளனர்.

கூகுள் - மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு இடையிலான தொழில்நுட்ப உலகிலான யுத்தம் உச்சம் பெற்று வருகிறது. தனது இருப்பை காணடிக்கச் செய்த கூகுளை, செயற்கை நுண்ணறிவு அஸ்திரங்களுடன் வீழ்த்த மைக்ரோசாப்ட் தயாராகி வருகிறது. ஏஐ நுட்பங்களை யார் திடமாகவும், நுட்பமாகவும் கையாள்வது என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. இதில் ’கோபைலட்’ சாட்பாட் அறிமுகம் மூலம் மைக்ரோசாப்ட் முந்திச் சென்றது. சுதாரித்த கூகுள் நிறுவனம், ஏஐ நுட்பத்தில் தனது அடியை மேலும் திடமாக முன்னெடுக்க முடிவு செய்துள்ளது. இந்த முயற்சி அதன் பணியாளர்கள் தலையில் இடியாக விழுந்துள்ளது.

பணி நீக்கம்

ஏஐ அமலாக்கம் காரணமாக ஹார்ட்வேர், வாய்ஸ் அசிஸ்டன்ஸ் மற்றும் என்ஜியனியரிங் துறைகளில் மிகப்பெரும் மாற்றத்தை கூகுள் நிறுவுகிறது. இதையே செலவினத்தை குறைக்கும் முயற்சிகள் என கூகுளின் தாய் நிறுவனமாக அல்பாபெட் வர்ணிக்கிறது. மேற்கண்ட துறைகளுடன் ஆக்மென்ட்டட் ரியாலிட்டி ஹார்டுவேர் துறையில் பெரும் தாக்கங்களும் நிகழவிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக நூற்றுக்கணக்கான பணியாளர்களை வீட்டு அனுப்ப முடிவு செய்திருக்கிறது கூகுள் நிறுவனம்.

கடந்த வருடம் தனது ஊழியர்களில் 6 சதவீதத்தினர் அதாவது 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்ததன் அடுத்தபடியாக, கூகுள் பணியாளர்களை தற்போதைய அறிவிப்பு கலங்கச் செய்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கைக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள ’அல்பாபெட் தொழிலாளர் சங்கம்’ தற்போதைய வேலை வெட்டுக்கள் முற்றிலும் தேவையற்ற நடவடிக்கை என விவரித்தது.

”கூகுள் பயனர்களுக்கு சிறந்த தயாரிப்புகளை உருவாக்க நாங்கள் ஒவ்வொரு நாளும் கடினமாக உழைத்து வருகிறோம். காலாண்டு தோறும் பில்லியன்களை சம்பாதித்து தருகிறோம். அப்படியிருக்கையில் சக ஊழியர்கள் தொடர்ந்து பணிநீக்கத்துக்கு ஆளாவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எங்களது பணிப்பாதுகாப்பு உறுதியாகும் வரை நாங்கள் போரிடுவதை நிறுத்த மாட்டோம்" என்று உறுதியான குரலில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மெட்டா பணி நீக்கம்

கடந்த ஓராண்டு காலமாக கூகுள் மட்டுமன்றி, உலகளாவிய டெக் நிறுவனங்கள் மத்தியில் பணியாளர் நீக்கம் என்பது புதிய டிரெண்டாகி வருகிறது. ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, ஒரே வருடத்தில் 20,000க்கும் மேற்பட்ட பணியிடங்களை நீக்கியுள்ளது. அதே வேளையில் மெட்டாவின் பங்கு விலை கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 178% எகிறியது. ஆனபோதும் பணியாளர் வயிற்றில் அடித்தது மெட்டா.

பிரபல மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவை நிறுவனமான ஸ்பாட்டிஃபை, மூன்றாவது சுற்று பணிநீக்கங்களில் 17% பணிவெட்டுகளை நிகழ்த்தியது. இந்த வார தொடக்கத்தில், அமேசான் தனது பிரைம் வீடியோ மற்றும் ஸ்டுடியோ பிரிவுகளில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. கடந்த ஓராண்டில் மட்டும் 18,000 ஊழியர்களை களையெடுப்பதாக அமேசான் அறிவித்தது.

இதையும் வாசிக்கலாமே...

அயோத்தியில் கோயில் கட்ட மோடியைத் தான் ராமர் தேர்வு செய்தார்: அத்வானி திடீர் புகழாரம்!

அமலாக்கத்துறை நெருக்கடி... ஜன.18-ம் தேதி ஆஜராக அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு 4வது முறையாக சம்மன்!

x