அயலகத் தமிழர்கள் 13 பேருக்கு தங்கப்பதக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!


தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது

உலக அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழர்கள் 13 பேருக்கு கணியன் பூங்குன்றனார் பெயரில் தங்கப் பதக்கங்களை வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.

தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் ‘தமிழ் வெல்லும்’ எனும் கருப்பொருளை மையமாக கொண்டு ‘அயலகத் தமிழர் விழா’ ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டின் ‘அயலகத் தமிழர் விழா’ சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது.

விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இதில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளில் வசிக்கும் தமிழ் வம்சாவளியினர் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாள் விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், 40-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளைத் திறந்து வைத்து பார்வையிட்டதோடு, அயலகத் தமிழர்களின் புத்தகங்களையும் வெளியிட்டார்.

அயலக தமிழர்கள்

இறுதி நாளான இன்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அயலகத் தமிழர் விழாவில் கலந்துகொண்டார். இதில் ‘எனது கிராமம்’ என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழர்கள் 13 பேருக்கு கணியன் பூங்குன்றனார் பெயரில் தங்கப்பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா'...பிரேமலதா விஜயகாந்தை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!

சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு பூஜை... தேவசம் போர்டு முக்கிய அறிவிப்பு!

x