கூகுள், எக்ஸ், அமேசான் உட்பட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது, ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், எக்ஸ், அமேசான் போன்றவை கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றன. இதன் காரணமாக தொழிலாளர்களின் பணி நேரம் குறையும் என அந்நிறுவனங்கள் அறிவித்திருந்த போதும், இது தொழிலாளர்களுக்கான பணி வாய்ப்புகளை பறிக்கும் செயல் என ஊழியர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனிடையே அடுத்தடுத்து கடந்த சில ஆண்டுகளாக முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வேலை நீக்கம் செய்து வருவது டெக் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் புத்தாண்டு பிறந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் தற்போது தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்களது வேலைநீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளன. டெக் உலகின் ஜாம்பவானான கூகுள், நடப்பாண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த சில ஆண்டுகளாக கூகுள் நிறுவனத்தின் குரல் பதிவான கூகுள் அசிஸ்டெண்ட் மற்றும் ஏஆர் வன்பொருள் அணி ஆகியவற்றிலிருந்து தொழில்நுட்ப ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பது தொடர்பான தகவலை கூகுள் வெளியிடாவிட்டாலும் கூட, உலகம் முழுவதும் சுமார் 12,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என்கிற அச்சம் எழுந்துள்ளது.
இருப்பினும் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு கூகுளின் வேறு நிறுவனங்களில் இணைய விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, கூகுள் நிறுவனத்தின் தாய் அமைப்பான ஆல்பபெட் நிறுவனத்தின் ஊழியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு காலண்டிலும் பில்லியன் கணக்கில் வருமானத்தை ஈட்டி வரும் கூகுள் நிறுவனம், இவ்வாறு ஊழியர்களை கொத்துக் கொத்தாக பணிநீக்கம் செய்வது சரியான நடவடிக்கை அல்ல எனவும், தொடர்ந்து தங்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய போராட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கூகுள் நிறுவனத்தைப் போலவே எலான் மஸ்க் தலைமையிலான எக்ஸ் நிறுவனமும் பாதுகாப்புப் பிரிவில் உள்ள ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதேபோல் அமேசான் நிறுவனமும் டிவிட்ச் மற்றும் பிரைம் வீடியோ பிரிவில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அதன் ஒட்டுமொத்த பணியாளர் எண்ணிக்கையில் சுமார் 35 சதவீதம் ஆகும்.
கடந்தாண்டு அமேசான் நிறுவனம் சுமார் 27,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருவதால், ஐடி ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
நடிகர் விஜயகாந்த் நினைவிடத்தில் கதறியழுத நடிகை ராதா!
மொத்தமும் போச்சு... ஓ.பீ.எஸ். மேல்முறையீட்டு வழக்கில் பரபரப்பு தீர்ப்பு: அதிமுகவினர் குஷி!
பகீர்... நடுரோட்டில் தலைமைக் காவலருக்கு அரிவாள் வெட்டு!
லெஸ்பியன் ஜோடிக்கு கோயிலில் நடந்த திருமணம்!
இனி பி.எட் படிப்புகளுக்கு தடை; மத்திய கல்வி அமைச்சகம் அதிரடி!