பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரஃபுக்கு தேசத்துரோக வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்த நாட்டு உச்சநீதிமன்றம் நேற்று உறுதி செய்தது.
பாகிஸ்தானில் கடந்த 2007-ம் ஆண்டு நெருக்கடி நிலையை முஷாரஃப் அறிவித்தார். அதற்காக அரசமைப்புச் சட்ட அமலாக்கத்தை அவர் நிறுத்தி வைத்தார். அவரே அதிபராக இருந்து ஆட்சி நிர்வாகம் செலுத்தினார்.
இது தொடா்பாக நடைபெற்று வந்த தேசத் துரோக வழக்கில் முஷாரஃபுக்கு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. ஆனால் சிறப்பு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று லாகூர் உயர்நீதிமன்றம் 2022 ல் தீர்ப்பளித்தது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்து வந்த 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, 2020-ல் லாகூர் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு செல்லாது என்று அறிவித்தது. அதையடுத்து, முஷாரஃபுக்கு எதிரான மரண தண்டனையை உச்சநீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளது. துபையில் நாடு கடந்து வசித்து வந்த முஷாரஃப், நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2023 பிப்ரவரி 5-ல் தனது 79 வது வயதில் மரணமடைந்தார். இந்த நிலையில் அவரது மரண தண்டனை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.