பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா-வின் கோஹாட் மாவட்டத்தில் சுங்கச்சாவடி மீது பயங்கரவாதிகள் இன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று போலீஸார் உள்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு பிராந்தியமான கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கோஹாட் மாவட்டத்தில் உள்ள லாச்சி சுங்கச்சாவடியில் இன்று காலை அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 3 போலீஸ்காரர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் நடந்ததும் அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதையும் போலீசார் சீல் வைத்து, தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் இடைக்கால முதலமைச்சரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான அர்ஷத் உசேன் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் கைபர் பக்துன்க்வா காவல்துறையின் சேவை மற்றும் தியாகம் பாராட்டுக்குரியது. காவல்துறையின் ஈடு இணையற்ற போராட்டத்தில் ஒட்டுமொத்த தேசமும் அதன் பின்னால் நிற்கிறது" என்றார்
இதையும் வாசிக்கலாமே...
பரபரப்பு... எழும்பூரில் திடீரென தடம் புரண்ட ரயில் எஞ்சின்!
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள்... 100க்கும் மேற்பட்டோர் கைது!