பலத்த மழை மற்றும் சூறாவளி காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நியூயார்க் நகரில், புலம்பெயர்ந்தவர்கள் 2 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் பலத்த மழை, சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும், இதனால் பலத்த சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து அந்நகரில் மழை, காற்று பாதிப்புக்கு ஆளாக வாய்ப்பு உள்ளதாக கண்டறியப்பட்ட இடத்தில் வசிக்கும் சுமார் 500 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் புலம் பெயர்ந்தவர்கள் அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தெற்கு புரூக்ளினில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுபாதையில் மிகப்பெரிய கூடாரம் அமைத்து, இவர்கள் அனைவரும் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக புலம்பெயர்ந்தோர் அனைவரும் அங்குள்ள ஜேம்ஸ் மேடிசன் உயர்நிலைப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து வேன்கள் மூலம் நிவாரணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
எடிசன் சாவேஸ் (38), வலேரியா லோபஸ் (36) தம்பதி, தங்கள் இரண்டு குழந்தைகளான ஆலன் (10), ஐகர் (5) ஆகியோருடன் ஈக்வடாரில் இருந்து நியூயார்க்கிற்கு ஒரு மாதத்துக்கு முன்பு வந்து குடியேறினர். இவர்கள் நியூயார்க்கின் ஃபிலாய்ட் பென்னட் ஃபீல்டுடில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பகுதி கனமழை, சூறாவளி காற்றால் பாதிக்கப்படும் என்பதால் வெளியேற்றப்பட்ட குடும்பங்களில் இவர்களது குடும்பமும் ஒன்று.
இதுகுறித்து எடிசன் சாவேஸ் கூறுகையில், “எங்கள் கூடாரங்கள் சூறாவளி காற்றுக்கு தாங்காது என்பதால், வெளியேற்றப்படுகிறோம் என்று தெரிவித்தனர். கடைசியாக ஏற்பட்ட புயல் பாதிப்பின்போது, நாங்கள் மிகவும் பயந்தோம். ஏனெனில் எங்கள் கூடாரம் தூக்கிச் செல்லப்படும் அளவுக்கு பாதிப்பு இருந்தது" என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
துணைமேயரை கொல்ல முயன்றது திமுக வட்டச் செயலாளரா?: மதுரை அரசியலில் பரபரப்பு!
பரபரப்பு... அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் திடீர் ராஜினாமா!
இன்று தமிழகம் முழுவதும் முற்றுகை போராட்டம்... தொழிற்சங்கங்கள் அதிரடி!
பொங்கலுக்கு 5 நாட்களுக்கு முன்பே உரிமைத்தொகை: வங்கிக் கணக்கில் வரவானதால் மகளிர் மகிழ்ச்சி!