ஜப்பானை மீண்டும் அதிரவைத்த நிலநடுக்கம்; அச்சத்தில் உறைந்துபோன மக்கள்!


நிலநடுக்கம்

ஜப்பானில் கடந்த 1ம் தேதி நூற்றுக்கணக்கான முறை பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

ஜப்பானின் ஹொன்ஷூ தீவில் உள்ள இஷிகாவா மாகாணத்தில் கடந்த 1ம் தேதி 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஒரு மீட்டர் உயரத்துக்கும் மேல் சுனாமி அலைகள் தாக்கின. இந்த நிலநடுக்கத்தில் சாலைகள் பெயர்ந்து பெரிதும் சேதமடைந்தன.

கடந்த 1 ஆம் தேதி ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட படம்

இஷிகாவா மாகாணத்தின் வஜிமா நகரில் ஆற்றின் முகத்துவாரத்துக்கு அருகே கடைகளால் சூழப்பட்ட பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இங்கு நிலநடுக்கத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மேலும், வஜிமா துறைமுகமும் பெரும் பாதிப்புக்குள்ளானது.

நிலநடுக்கம் (கோப்பு படம்)

இந்நிலையில் ஜப்பானின் மேற்கு கடற்கரை பகுதியான ஹோன்ஷிகோ என்ற இடத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அளவுகோலில் 6 ரிக்டர் என்ற அளவில் பதிவானது. நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் நின்றனர். 10 நாட்களில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது ஜப்பான் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு... முதல்வரின் அசத்தல் அறிவிப்பு!

x