அமெரிக்காவில் உள்ள மால் ஒன்றில் ஏலியன்கள் வானத்தில் இருந்து இறங்கி வந்துள்ளதாக, வெளியாகி இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு உலக நாடுகளை திரும்பி பார்க்க செய்துள்ளது.
தமிழில் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அயலான். வானத்தில் இருந்து பூமிக்கு வரும் ஏலியனால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது? என்பதை இந்த படத்தில் அழகாக காண்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில் நேற்று, இதன் டிரெய்லர் வெளியாகி பலரிடமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
இது, முழுக்க முழுக்க சினிமா விவகாரம் என்றாலும் தற்போது நிஜத்தில் அமெரிக்காவில் உள்ள மால் ஒன்றில் ஏலியன்கள் வானத்தில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு, உலக நாடுகளை திரும்பி பார்க்க செய்துள்ளது. அதாவது அமெரிக்க நாட்டில் உள்ள ப்ளோரிடா மாகாணம், மியாமி பகுதியில் மால் ஒன்று அமைந்துள்ளது.
இந்த மாலில் 10 அடி உயரம் கொண்ட ஏலியன் ஒன்று சுற்றித் திரிவதாக திடீரென புகார் எழுந்த நிலையில், அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் மியாமி மாலுக்கு மேலே ஏலியன்கள் வாகனங்கள் என பரவலாக கூறப்படும் பறக்கும் தட்டுகளின் வெளிச்சம் தென்பட்டதும் இதுதொடர்பாக வெளியாகி இருக்கும் வீடியோவில் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணை மற்றும் சோதனையின் அடிப்படையில் இந்த வீடியோ மற்றும் ஏலியன் வருகை எல்லாமே சில விஷமிகள் கிளப்பிவிட்ட வதந்தி என, தகவல் வெளியாகி உள்ளது.
மனிதன் நிலவில் கால் வைத்தது முதல் வேற்றுகிரக வாசிகளை தேடும் ஆராய்ச்சி தொடர்ந்தபடி இருந்தாலும், அவ்வப்போது இதுபோன்ற தகவல் வெளியாவதும் வழக்கமான ஒன்றாகத்தான் உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கனமழை எதிரொலி... அண்ணாமலை பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!