அதிர்ச்சி... 2வது முறையாக மீண்டும் பழுதானது கனட பிரதமரின் விமானம்!


ஜஸ்டின் ட்ரூடோ

ஜமைக்கா சென்றிருந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானத்தில் மீண்டும் பழுது ஏற்பட்டுள்ளது. கடந்த 3 மாதத்தில் கனடா பிரதமரின் விமானம் இரண்டு முறை பழுதாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டுக்கு வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மாநாட்டில் பங்கேற்ற நிலையில், நாடு திரும்பும்போது அவர் செல்ல வேண்டிய விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் சரியாகும் வரையில் அவர் இந்தியாவிலேயே காத்திருந்தார்.

ஜஸ்டின் ட்ரூடோ

கனடா பிரதமர் செல்ல வேண்டிய விமானம் இயந்திர கோளாறு காரணமாக 36 மணி நேரம் கழித்தே புறப்பட்டது. அதுவரை அவர் இந்தியாவில்தான் இருந்தார். CFC001 விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், மாற்று ஏற்பாடு வரும் வரையில் கனட பிரதமரின் குழுவினர் இந்தியாவில் தங்கியிருந்தனர். பிரதமரின் விமானத்திலேயே கோளாறு ஏற்பட்டதை அப்போதே கனட எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையில் டிசம்பர் 26ம் தேதி, ஜஸ்டின் ட்ரூடோ, தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக ஜமைக்கா நாட்டிற்குச் சென்றிருந்தார். இந்த பயணம் முடிந்து ஜனவரி 4ம் தேதி அவர் கனடா திரும்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஜன.3ம் தேதி அவரது விமானத்தை தயார் செய்வதற்காக அதை பரிசோதித்த பராமரிப்புக் குழுவினர், விமானத்தில் ஒரு பிரச்சினை இருப்பதைக் கண்டறிந்தனர்.

ஜஸ்டின் ட்ரூடோ

கனடா பிரதமரின் விமானத்தில் பழுது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதை சரிசெய்வதற்கான கனடாவிலிருந்து ஒரு குழுவினர் மற்றொரு விமானம் மூலம் ஜமைக்காவுக்குச் சென்றனர். இதனைத் தொடர்ந்து பழுது பார்க்கப்பட்ட பின் இரண்டு விமானங்களும் கனடா திரும்பியுள்ளன. கடந்த 3 மாதத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானம் இரண்டு முறை பழுதாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக விமான பராமரிப்புக்குழுவினரிடம் கனட அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x