நியூசிலாந்து நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட இளம் பெண் எம்.பி... வைரலாகும் வீடியோ!


ஹனா ரவ்ஹிதி மைபி

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இளம் பெண் எம்.பி ஆற்றிய உரையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நியூசிலாந்து ஹன்ட்லி பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் ஹனா ரவ்ஹிதி மைபி (21). இவர், கடந்த அக்டோபர் மாதம் அந்த நாட்டு நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக தேர்வு செய்யப்பட்ட இளம்பெண் எம்.பி என்ற பெருமையை பெற்று சிறப்பாக பணி செய்து வருகிறார்.

இந்த நிலையில் இளம் பெண் எம்.பி ஹனா ரவ்ஹிதி மைபி சமீபத்தில் நியூசிலாந்து நாடாளுமன்ற அவையில் பேசிய உரையின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உரையாற்றும் எம்.பி

நியூசிலாந்து நாட்டை பொறுத்தவரை ஹக்கா நடனம் அந்த நாட்டு மௌரி பழங்குடியின மக்களின் ஆதிகால பழக்க வழக்கங்களில் ஒன்றாக உள்ளது.

தற்போது அந்த நடனம் மற்றும் பாடலுக்கேற்றபடி உடல் அசைவுகளுடன் ஹனா ரவ்ஹிதி மைபி தனது உரையை ஆற்றி நாடாளுமன்றத்தையே தெறிக்கவிட்டுள்ளார்.

குறிப்பாக அவர் தன்னுடைய உரையில், ‘நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு முன்பாக தனிப்பட்ட முறையில் எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என, எனக்கு சில அறிவுரைகள் வழங்கப்பட்டன.

பெண் எம்.பி ஆவேச முழக்கம்

சரி, இந்த அவையில் கூறப்பட்ட அனைத்தையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது’ என, ஹனா ரவ்ஹிதி மைபி பேசியது அவையில் இருந்த பலரையும் ரசிக்க வைத்தது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் ஹனா ரவ்ஹிதி மைபி ஆற்றிய உரையானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால் உலக அளவில் ஃபேமஸ் ஆகியுள்ளார். மவோரி சமூகத்தை சேர்ந்த இவர், தன்னுடைய மக்களுக்கான உரிமைக் குரலாகவும் ஒலித்து வருகிறார்.

x