நாளை தொடங்குகிறது உலக முதலீட்டாளர்கள் மாநாடு... 5 பில்லியன் டாலருடன் வருகிறது சிங்கப்பூர் குழு!


உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுப் பணிகள்

நாளை தொடங்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக தமிழ்நாட்டில் ஐந்து பில்லியன் டாலர் முதலீடு செய்யும் வகையிலான திட்டங்களுடன் சிங்கப்பூர் குழுவினர் இந்தியா வருகை தர உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து தமிழக அரசு பயணித்து வருகிறது. இதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் பல நாடுகளுக்கும் சென்று முதலீடுகளை திரட்டி வருகிறார். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி 7 மற்றும் 8ம் தேதிகளில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது.

இந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தின் வாயிலாக சுமார் 5.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சுமார் ஐந்து மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் மதிப்பிலான முதலீட்டைச் செய்ய சிங்கப்பூர் அரசு முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூர்

இந்தியாவுக்கான சிங்கப்பூர் நாட்டின் உயர் கமிஷனரின் எக்ஸ் கணக்கில் நேற்று மாலை இதுகுறித்து முக்கியமான தகவல் பகிரப்பட்டுள்ளது. தனது எக்ஸ் கணக்கில் 'தமிழ்நாடு அரசின் உலகளாவிய முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கிளம்பிவிட்டோம். இந்த முதலீட்டுக் கூட்டத்தின் முதல் கூட்டணி நாடாகச் சிங்கப்பூர் இருக்கும் வேளையில், இக்கூட்டத்தில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் 5 பில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடக்கும்' என தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர்

இந்த முதலீட்டு ஒப்பந்தங்கள் நாளை 7ம் தேதி சென்னை டிரேட் சென்டரில் மதியம் 3.15 மணிக்கு நடக்க உள்ள சிங்கப்பூர் கூட்டத்தில் கையெழுத்தாகும் என ஹெச்சி வாங் கூறியுள்ளார். தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் நாடான சிங்கப்பூர் இந்தியாவுடன் நீண்ட கால நட்புறவைக் கொண்டுள்ளது, இந்தப் புதிய முதலீடுகள் மூலம் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகத் தொடர்பு கூடுதல் வலிமை பெறும் என கூறப்படுகிறது.

x