[X] Close

அமெரிக்காவில் கனமழை: வெள்ளை மாளிகையில் தண்ணீர் தேங்கியது


  • kamadenu
  • Posted: 09 Jul, 2019 17:26 pm
  • அ+ அ-

அமெரிக்காவில் நேற்று பெய்த கனமழை காரணமாக வெள்ளை மாளிகையில் தண்ணீர் தேங்கியது.

அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் இன்று கனமழை பெய்தது. இதன் காரணமாக மாகாணத்தின் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது. இந்த மழை காரணமாக ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நீர் சூழ்ந்து கொண்ட புகைப்படங்களும் வெளியானதால் அவை சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

gvfder.jpg 

இதனைத் தொடர்ந்து ஊழியர்கள் நீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அமெரிக்காவின் வடக்குப் பகுதி, வெர்ஜினியாவில் கனமழை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close