[X] Close

உலகளவில் பசி, பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஐ.நா., அறிக்கை


world-s-hungry-population-on-the-rise-again-says-un-report

  • பாரதி ஆனந்த்
  • Posted: 22 Jun, 2018 14:11 pm
  • அ+ அ-

உலகளவில் பசி பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஐ.நா., சபை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐ.நா., தெரிவித்திருக்கிறது.

2016-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி உலகளவில் 815 மில்லியன் மக்கள் பசி, பட்டியினால் வாடுவதாகவும் 2015-ல் இந்த எண்ணிக்கை 777 மில்லியன் என்ற அளவிலேயே இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

காரணம் என்ன?
ஐ.நா.,வின் 'நீடித்த வளர்ச்சிக்கான லட்சியங்கள் 2018' (Sustainable Development Goals 2018 ) என்ற அறிக்கையில்தான் இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 நாடுகளில் உணவு பாதுகாப்பின்மை நிலவுகிறது என்றும் இதற்குக் காரணம் சண்டை சச்சரவுகள் எனவும் ஐ.நா., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர், வறட்சி, பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களால் பசி பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஐ.நா., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிட்டு எந்த ஒரு நாடும் குறிப்பிட்டு சுட்டிக்காட்டப்படவில்லை. இருப்பினும் தெற்காசியப் பிராந்தியத்துக்கான சில புள்ளிவிவரங்களை வெளியிடிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள் 2000-ல் இருந்ததைவிட 2017-ல் 40% குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தண்ணீர் பற்றாக்குறை இந்தியா போன்ற நாடுகளில் 70% அதிகரித்திருக்கிறது, நகர்ப்புறங்களில் வாழ்வோரில் 10-ல் 9 பேர் காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தெற்காசியாவில் மின்சார வசதியும் கழிப்பறை வசதிகளும் இன்னும் குறைவாகவே இருப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை ஐ.நா., பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸுக்கு அனுப்பப்பட்டது. இந்த அறிக்கையை பார்வையிட்ட ஐ.நா., பொதுச் செயலாளர் "2030-க்குள் பசி பட்டினியில்லாத உலகை உருவாக்கும் இலக்குடன் முன்னேற இன்னும் அவசரகால அடிப்படையில் செயற்திட்டங்கள் தேவை" என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close