[X] Close

ட்ரம்ப்பிடமிருந்து வந்த சிறப்பான கடிதம்: வடகொரியா


  • kamadenu
  • Posted: 24 Jun, 2019 13:37 pm
  • அ+ அ-

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிறப்பான கடிதம் ஒன்றை எழுதியிருப்பதாக வடகொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வடகொரியா தரப்பில், ''அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடமிருந்து தனிப்பட்ட ரீதியில் சிறப்பான கடிதம் ஒன்று வந்திருக்கிறது. அந்தக் கடிதத்தில் அற்புதமான கருத்துகள் உள்ளன'' என்று தெரிவித்துள்ளது.

இந்தக் கடிதத்தில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறித்து வடகொரியா தெரிவிக்கவில்லை

கடந்த மாதம் கிம் தரப்பிலிருந்து ட்ரம்ப்புக்கு கடிதம் எழுதப்பட்ட நிலையில் தற்போது ட்ரம்ப், கிம்முக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால், எதிர்ப்புகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

எனினும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது. இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென்கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டு ட்ரம்ப் - கிம் இடையே சந்திப்பு நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோயில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில் இரு நாடுகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும்  எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதன் பிறகு இருநாடுகளிடையே தொடர்ந்து அவ்வப்போது மோதல்கள் நடந்த வண்ணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close